Tawa Chicken
தவா சிக்கன் மசாலா
தேவையான பொருட்கள் :
- 1 கிலோ சிக்கன்
- 2 பெரிய வெங்காயம்
- 1 தக்காளி 6 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 1 பச்சை மிளகாய்
- 6 காய்ந்த மிளகாய்
- 1 எலுமிச்சம் பழம்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 2 மேஜைக்கரண்டி மல்லி விதை
- 1½ மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி மிளகு தூள்
- 1¼ மேஜைக்கரண்டி சீரகம்
- 3 கிராம்பு
- 1 நட்சத்திர பூ
- 1 ஏலக்காய்
- 4 துண்டு பட்டை
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு Bowl லை எடுத்து அதில் நாம் கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற விடவும்.
பின்பு ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் மல்லி விதை, சோம்பு, ஒரு மேஜைக்கரண்டி சீரகம், கிராம்பு, நட்சத்திர பூ, ஏலக்காய், 2 துண்டு பட்டை, மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை நன்கு பொன் நிறம் வரும் வரை வறுக்கவும்.
அது பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விடவும். சிறிது நேரத்திற்கு பிறகு அது ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு Tawa வை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 8 லிருந்து 10 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் கால் மேஜைக்கரண்டி அளவு சீரகம் மற்றும் 2 துண்டு பட்டையை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் ஊற வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 5 நிமிடம் வரை அதை வேக விடவும். (சிக்கனை ஒரு கரண்டியின் மூலம் தியாமல் கிண்டி விடவும்.)
5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் தெளித்து சிக்கன் நன்கு வேகும் வரை அதை வேக விடவும். ( கரண்டியின் மூலம் சிக்கனை தியாமல் நன்கு கிளறி விடவும்.)
சிக்கன் நன்கு வெந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து கீழே இறக்கி ஒரு தட்டில் வைத்து சாப்பிடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் தவா சிக்கன் மசாலா தயார்.


Super
ReplyDeleteYour comment will be visible after approval.