Soya Chunks
சோயா சங்க் மஞ்சூரியன்
தேவையான பொருட்கள் :
- 2 கப் சோயா சங்க்
- ¼ கப் சோள மாவு
- ¼ கப் மைதா மாவு
- 1 to 2 பச்சை மிளகாய்
- ½ கப் பச்சை குடை மிளகாய்
- ½ கப் சிவப்பு குடை மிளகாய்
- ½ கப் மஞ்சள் குடை மிளகாய்
- ¼ கப் ஸ்ப்ரிங் ஆனியன்
- 5 பல் பூண்டு
- 1¼ துண்டு இஞ்சி
- ½ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- 2 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
- 2 மேஜைக்கரண்டி ரெட் சில்லி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி கெட்சப்
- 1 மேஜைக்கரண்டி வினிகர்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை :
முதலில் 2 பூண்டு மற்றும் கால் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், குடை மிளகாய், மற்றும் ஸ்பிரிங் ஆனியனை நறுக்கி வைத்து கொள்ளவும். இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சோயா சங்கைவேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் சோயா சங்கை போட்டு அதை ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிண்டி விட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சோயா சங்கை கீழே இறக்கி அதில் இருக்கும் தண்ணீரை நன்கு வடித்து பின்பு அதை பச்சை தண்ணீரில் போட்டு நன்கு அலசி பிறகு அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் இருக்கும் தண்ணீரை ஒரு கரண்டியின் மூலம் லேசாக நசுக்கி எடுத்து விடவும்.
பின்னர் அந்த சோயா சங்கை ஒரு Bowl ல் போட்டு அதில் சோள மாவு, மைதா மாவு, ஒரு மேஜைக்கரண்டி நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் கால் பாகம் அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் கலந்து வைத்திருக்கும் சோயா சங்கை போட்டு அது ஒரு புறம் வெந்ததும் மறு புறம் திருப்பி விட்டு இரு புறமும் அது வெந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் 2 மேஜைக்கரண்டி பூண்டு, ஒரு மேஜைக்கரண்டி அளவு இஞ்சி, மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய்யை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டின் பச்சை வாசம் போனதும் அடுப்பை ஏற்றி வைத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்ப்ரிங் ஆனியன், மற்றும் குடை மிளகாய்களை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், கெட்சப், கால் மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
அடுத்து ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவை எடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கரைத்து கொதித்து கொண்டிருக்கும் மசாலாவில் சேர்த்து நன்கு கலந்து விட்டு அது சிறிது கெட்டியாகும் வரை அதை கொதிக்க விடவும்.
அது சிறிது கெட்டியானதும் அதில் நாம் வேக வைத்து வறுத்து வைத்திருக்கும் சோயா சங்கை போட்டு அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை அதை வேக விடவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அதில் வினிகரை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு பின்பு அதில் சிறிதளவு நாம் நறுக்கி வைத்திருக்கும் ஸ்பிரிங் ஆனியனை தூவி ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வைத்து சாப்பிடவும்.
இப்போது உங்களுக்கு பிடித்த சூடான மற்றும் மிகவும் சுவையான சோயா சங்க் மஞ்சூரியன் தயார்.


Your comment will be visible after approval.