புல்லா குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு வர்றவனை செருப்பால அடிக்காத பொண்டாட்டி,
கண்ணுமண்ணு தெரியாம பைக்குல பறக்கும் புள்ளைய வெளக்கமாத்தால வெளுக்காத அம்மா,
கால் எட்டாத வயசுல பைக் எடுத்து சுத்தும் புள்ளைய பார்த்து பூரித்து போகும் அப்பா,
நெடுஞ்சாலையில் எப்ப ஹைபீமை டிம் பண்ணனும்னு கூட தெரியாத டிரைவரை கண்டுக்காத குடும்பங்கள்,
பெட்ரோல் டேங்கில் தூங்கும் புள்ள, பின்னாடி ஒரு கைல ஷாப்பிங் பேக், இன்னொரு கைல புள்ளனு வண்டிய புடிக்காம உட்காரும் பொண்டாட்டியோட எல்லா சிக்னலையும் தவறாமல் ஜம்ப் அடிக்கும் குடும்பஸ்தன்.
ரியர் வீயூ மிரர் வண்டி அழகை கெடுக்குதுன்னு அத கழட்டி வைக்கும் பொண்ணுங்க (பசங்க)
கொஞ்சம் கூட டிரைவிங் சென்சே இல்லாம தன் அப்பன் ஊட்டு ரோடு மாதிரி சிக்னல் போடாம வண்டிய திருப்புற பொண்ணுங்க..
இவங்க எல்லாம் செவ்வாய் கிரகத்துல இருந்து வரலை. நம்ம வீடுகளில் இருந்துதான் கிளம்பறாங்க. இவங்களை தட்டி கேட்ட துப்பில்லாத நாம தான் ஊருக்கு உபதேசம் பண்றோம்.
எந்த தப்பு பண்ணிட்டு போனாலும் நமக்கு சப்பை கட்டு கட்ட, போலீஸ் ஸ்டேஷன் ல காப்பாத்த குடும்பம் வரும்கிற திமிர் தான் எல்லா தவறுகளுக்கும் காரணமா இருக்கு.
தன்னை திருத்திக்காத எவனும் அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ணாதீங்க.
நலம் வாழ எல்லோருக்கும் நல்வாழ்த்துக்கள்.

Your comment will be visible after approval.