Aadi Velli - ஆடி வெள்ளி
எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் அவை ஆடி வெள்ளிக்கு ஈடாகாது என்று சொல்வார்கள்.
அந்த அளவுக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் மிகவும் சிறப்பு மிக்கவை.
இந்த நாளில் அம்மன் ஆலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் சிறப்பாக இருக்கும்.
கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி! கோடி நன்மைகள் தரும் ஆடி வெள்ளி! ஆடி மாத்தில் மட்டும் சிவன், சக்திக்குள் அடங்கிவிடுவார்.
அதனால் சிவனைக் காட்டிலும் சக்திக்குத்தான் ஆடி மாதங்களில் வலிமை அதிகம் என்ற ஐதீகம் உள்ளது.
எனவே, ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை, ஆதிபராசக்தி, அகிலாண்டேஸ்வரி, புவனேஸ்வரி அம்மன்களை அலங்கரித்து வழிபடுவது வளங்களைத் தரும்.
இந்த ஆடி வெள்ளிக்கிழமை வழிபாட்டின் மூலம் குடும்பம் முன்னேற்றம் காணும். திருமண பாக்கியம் கிடைக்கும். கணவனுக்கு வேலை, தொழிலில் முன்னேற்றம் காணப்படும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வழிபட்டு, புற்றுகளுக்குப் பால் ஊற்றி வழிபட்டால் குலம் தழைக்கும். ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை, பூஜை அறையைச் சுத்தம் செய்து, சுவாமி சிலைகள், படங்களுக்கு பூக்கள் இட்டு அலங்காரம் செய்ய வேண்டும்.
வேப்பிலையை வீட்டின் வாசலில் கட்டி வைக்க வேண்டும். ஒரு சொம்பு தண்ணீரை எடுத்து அதில் சிட்டிகை மஞ்சள், குங்குமம், வேப்பிலை போட்டு அம்மன் படத்துக்கு முன்பாக வைத்து மனதார வழிபாடு செய்ய வேண்டும். அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து தீபாராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் குத்துவிளக்கு பூஜை செய்து, சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத் துணி, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.
அம்மனுக்கு உகந்த இந்த ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. அதே போன்று சுக்கிரனுக்கும் பாலாபிஷேகம் செய்து வழிபடலாம்.


Your comment will be visible after approval.