Soya Chunks
சோயா சங்க் 65 செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
- 1 கப் சோயா சங்க்
- 2 மேஜைக்கரண்டி சோள மாவு
- 2 மேஜைக்கரண்டி கடலை மாவு
- 1 மேஜைக்கரண்டி அரிசி மாவு
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- ½ எலுமிச்சம் பழம்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 சிட்டிகை பெருங்காய தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை :
முதலில் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
ஒரு பத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமாக சூடேற்றவும். அதில் சோயா சங்குகளை ஊற வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சிட்டிகை அளவு உப்பு போட்டு அதை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்டதும் அடுப்பை அணைத்து விட்டு அதில் சோயா சங்குகளை போட்டு அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
30 நிமிடத்திற்கு பிறகு ஊற வைத்திருக்கும் சோயா சங்குகளை எடுத்து அதை நன்றாக பிழிந்து அதில் இருக்கும் தண்ணியை முற்றிலுமாக எடுத்த பின் ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
பின்பு அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட், பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு, மஞ்சள் தூள், கரம் மசாலா, மற்றும் பெருங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் சோள மாவு, கடலை மாவு, மற்றும் அரிசி மாவை போட்டு சிறிதளவு தண்ணீர் தெளித்து சோயா சங்குகள் நன்கு மாவோடு ஓட்டுமாறு அதை கிளறி விடவும்.
பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமாக சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின்பு நாம் கலந்து வைத்திருக்கும் சோயா சங்குகளை பக்குவமாக எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வேக விடவும்.
சோயா சங்குகள் இரு புறமும் நன்கு பொன்னிறமானதும் அதை ஒரு கரண்டியின் மூலம் எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும் போதே அதில் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு பொரித்து எடுத்து அதை சோயா சங்க் 65 வுடன் சேர்த்து நன்கு கிளறி விடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் மொறு மொறுபாக இருக்கும் சோயா சங்க் 65 தயார்.

Your comment will be visible after approval.