Mutton
மட்டன் குழம்பு செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
- 1 கிலோ மட்டன்
- 30 சின்ன வெங்காயம்
- 1 பெரிய வெங்காயம்
- 4 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 10 காஞ்ச மிளகாய்
- 8 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 2 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி தனியா
- 2 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 1 மேஜைக்கரண்டி சோம்பு
- 1 துண்டு பட்டை
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 1 நட்சத்திர பூ
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, மற்றும் கருவேப்பிலையை நறுக்கி வைத்து கொள்ளவும், தேங்காயை துருவி வைத்து கொள்ளவும், மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் தனியா, சீரகம், மிளகு, சோம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில்10 லிருந்து 12 சின்ன வெங்காயம், பூண்டு, மற்றும் இஞ்சியை சேர்த்து பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு நாம் வதக்கிய மசாலா பொருட்களை ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் அதை ஆற விடவும்.
ஆறியதும் அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜார்க்கு மாற்றி அதை முதலில் சிறிது அரைத்து விட்டு பின்பு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் நட்சத்திர பூவை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 20 சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை போட்டு வெங்காயம் பொன் நிறம் ஆகும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் பொன் நிறம் ஆனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி மற்றும் கருவேப்பிலையை போட்டு நன்கு கிளறி விட்டு அதை சுமார் 4 லிருந்து 6 நிமிடம் வரை வதக்கவும்.
6 நிமிடத்திற்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு தக்காளி நன்கு வேகும் வரை அதை வேக விடவும்.
தக்காளி நன்கு வெந்ததும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் மட்டனை போட்டு அதை பக்குவமாக நன்கு மசாலாக்கலோடு ஓட்டுமாறு கிண்டி விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதில் 6 கப் அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (உப்பை சரி பார்த்து தேவைப்பட்டால் உப்பு சேர்த்து கொள்ளவும்.)
குழம்பு நன்கு கொதித்ததும் ஒரு மூடி போட்டு அதை நன்கு வேகும் வரை வேக விடவும். அவ்வப்போது மூடியை திறந்து ஒரு கிளறு கிளறவும்.
மட்டன் வெந்ததும் அதில் சிறிதளவு கருவேப்பிலை தூவி மீண்டும் ஒரு கிளறு கிளறி அதை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் அட்டகாசமான மட்டன் குழம்பு தயார்.


Your comment will be visible after approval.