Pudina Rice
தேவையான பொருட்கள் :
- 1 கப் புதினா இலை
- 1 கப் வேக வைத்த ரைஸ்
- 100 கிராம் பச்சை பட்டாணி
- 6 to 8 சின்ன வெங்காயம்
- 4 to 6 பல் பூண்டு
- 2 பச்சை மிளகாய்
- 2 சிவப்பு மிளகாய்
- ½ மேஜைக்கரண்டி கடுகு
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- 1 மேஜைக்கரண்டி கடலை பருப்பு
- 1½ மேஜைக்கரண்டி வேர்க்கடலையை
- 1 மேஜைக்கரண்டி துருவிய தேங்காய்
- 1 எலுமிச்சம் பழம்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
செய்முறை :
முதலில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் பூண்டை வெட்டி வைத்துக்கொள்ளவும். தேங்காயை துருவி வைத்துக்கொள்ளவும், எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து வைத்துக்கொள்ளவும், புதினா இலையை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 25 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். 30 நிமிடத்திற்கு பிறகு அரிசியை மீண்டும் நன்கு கழுவி அதை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு சுமார் 2 விசில் வரும் வரை அதை வேக வைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அது சுட்டதும் அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், மற்றும் பூண்டை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை சேர்த்து அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் புதினா இலையை போட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும். (புதினா இலை நன்கு சுருளும் வரை அதை வதக்கவும்.)
ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி வைத்து சிறிது நேரம் ஆற விடவும். அது ஆறியதும் அதை ஒரு மிக்ஸி ஜாரூக்கு மாற்றி அத்துடன் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும். (தேவையான அளவு தண்ணீர் சேர்த்தால் போதும் அதிகமாக தண்ணீர் சேர்த்து விடக்கூடாது.)
அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் கடுகை போட்டு கடுகு வெடித்ததும் அதில் உளுத்தம் பருப்பு, மற்றும் கடலை பருப்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணி மற்றும் நாம் அரைத்து வைத்திருக்கும் புதினா பேஸ்ட்டையும் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை சுமார் 2 நிமிடம் வரை வதக்கவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் தயார் செய்து வைத்திருக்கும் சாதத்தை போட்டு அதனுடன் வேர்க்கடலையையும் சேர்த்து அதை பக்குவமாக நன்கு கிளறி விடவும். பின்பு அதில் நாம் பிழிந்து வைத்திருக்கும் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு புதினா ரைஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து சாப்பிடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் உடம்பிற்கு மிகவும் சத்தான புதினா ரைஸ் தயார்.


Your comment will be visible after approval.