Chicken Sukka
சிக்கன் சுக்கா செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
- 750 கிராம் சிக்கன்
- 2½ பெரிய வெங்காயம்
- 1 கப் துருவிய தேங்காய்
- 4 to 5 பல் பூண்டு
- 8 to 10 காஞ்ச மிளகாய்
- 1 துண்டு பட்டை
- 3 to 4 கிராம்பு
- 8 to 10 கருப்பு மிளகு
- ½ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி வெந்தயம்
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மல்லி விதைகள்
- 1 மேஜைக்கரண்டி கசகசா
- புளி - நெல்லிக்காய் சைஸ்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை :
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்து கொள்ளவும். ஒரு பூண்டை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தேங்காயை துருவி வைத்து கொள்ளவும். சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
புளியை சுமார் 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு தண்ணீரில் நன்கு கரைத்து அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி தண்ணியை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பட்டை, கருப்பு மிளகு, கிராம்பு, வெந்தயம், சீரகம், மல்லி விதை, மற்றும் கசகசாவை போட்டு அது நன்கு வாசம் வரும் வரை அதை வறுக்கவும்.
நன்கு வாசம் வந்ததும் அதை அப்படியே எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு சிறிது நேரம் அதை ஆற விடவும். பின்னர் அதே Pan ல் காய்ந்த மிளகாயை போட்டு அதை சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வறுத்து எடுத்து அதையும் தட்டில் போட்டு பரப்பி விட்டு நன்கு ஆற விடவும்.
பிறகு அதே Pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும். அதில் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போட்டு அது லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கி பின்பு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு ஆற விடவும்.
மறுபடியும் அதே Pan ல் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் சேர்த்து அதை உருக விடவும். நெய் உருகியதும் ஆதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் அரை வெங்காயம் மற்றும் 3 லிருந்து 4 பூண்டை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி நன்கு பரப்பி விட்டு அதையும் ஆற விடவும்.
அடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் அனைத்தும் நன்கு ஆறியதை உறுதி செய்த பின் அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள், நாம் தயார் செய்து வைத்திருக்கும் புளி தண்ணீரில் இருந்து ஒரு மேஜைக்கரண்டி, மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை உருக விடவும்.
நெய் உருகியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் 2 வெங்காயம் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வெங்காயம் லேசாக பொன்னிறம் ஆகும் வரை அதை வதக்கவும். வெங்காயம் லேசாக பொன்னிறமானதும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை போட்டு அதை நன்கு கிளறி விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு சிக்கன் நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதை நன்கு கலந்து விட்டு ஒரு மூடி போட்டு சுமார் 12 லிருந்து 14 நிமிடம் வரை வேக விடவும்.
14 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதில் சிறிதளவு கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலையை தூவி அதை நன்கு கலந்து விட்டு மீண்டும் சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
5 நிமிடத்திற்கு பிறகு அதை ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து சப்பாத்தியுடனோ அல்லது நான்வுடனோ சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
இப்போது உங்களுக்கு பிடித்த சூடான மற்றும் மிகவும் சுவையான சிக்கன் சுக்கா தயார்.


Your comment will be visible after approval.