குலதெய்வ வழிபாட்டினை வீட்டிலேயே செய்யலாம் வாங்க!
குலதெய்வக் கோயிலுக்கு நாம் ஒவ்வொரு வருடமும் சென்று கிடா வெட்டி பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம், மேலும் காது குத்து போன்ற விழாக்களையும் நாம் குல தெய்வ கோயிலேயே செய்வோம்.
ஆனால் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் ஏறக்குறைய 4 மாதங்களுக்கும் மேலாக கோயில்கள் திறக்கப்படவில்லை. இதனால் பலரும் கோயிலுக்குச் செல்ல முடியாமல் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நாம் வீட்டில் இருந்தபடியே குல தெய்வ வழிபாடு செய்வது எப்படி என்று பார்க்கலாம். அதாவது குல தெய்வ வழிபாடானது, மற்ற பொதுவான கடவுள்களின் வழிபாட்டினைவிட வித்தியாசமானது என்பது நாம் அனைவரும் அறிந்ததே ஆகும்.
அதாவது எத்தனை கடவுள்களின் அருள் இருந்தாலும், குல தெய்வக் கடவுளின் அருள் கிடைத்தால் மட்டுமே நாம் வாழ்வில் சிறந்து விளங்க முடியும், நம்மைக் காக்கும் கடவுளாக இருக்கும் குல தெய்வ வழிபாட்டினை செய்து கடவுளின் அனுகூலத்தைப் பெறலாம்.
அதாவது குல தெய்வ கோயிலுக்குச் செல்லும் முன் குளித்து குலதெய்வத்தின் புகைப்படத்தை கிழக்கு நோக்கி வைத்துக் கும்பிடுதல் வேண்டும்.
மேலும் புகைப்படத்தின் முன்னர் வாழை இலையினைப் போட்டு சாதம், கறிக் குழம்பு, கறி வறுவல், சுருட்டு, மூக்குப் பொடி, சாராயம், வெற்றிலை பாக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், வாழைப்பழம் வைத்து சாமி கும்பிடுதல் வேண்டும்.
மேலும் மஞ்சள் கயிறினை வைத்து வழிபட்டுப் பெண்கள் அணிந்து கொள்ளலாம். மேலும் சாம்பிராணி தூபம் ஏற்றி கற்பூர ஆரத்தி காண்பித்து, பூஜையை முடித்து அனைவரும் சாப்பிடலாம், மேலும் அன்னதானத்தையும் செய்யலாம்.


Your comment will be visible after approval.