ஏழரை சனிப் பிரச்சினைக்குத் தீர்வு தரும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்!
ஏழரைச் சனி பிரச்சினை உள்ளவர்கள் பல வகையான கோயில்களுக்கு சென்று பரிகாரங்கள் செய்வதுண்டு, அவற்றில் ஒன்று திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில். இங்கு சனி தோஷங்களுக்கு தோஷ நிவர்த்தி கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதாவது இங்குள்ள சனீசுவரன் ஏழரை சனிப் பிரச்சினைகளுக்கான தோஷ நிவர்த்தி கொடுப்பதில் புகழ்பெற்று விளங்குகிறார். அதாவது இந்தக் கோயிலில் உள்ள நள தீர்த்தத்தில் பக்தர்கள் குளித்து அந்த ஆடைகளை அங்கேயே களைந்து சனீசுவரை தரிசனம் செய்து இறைவன் வணங்கி தோஷ நிவர்த்தி பெறுகின்றனர்.
ஒவ்வொரு மாதம் பிரதோஷ நாட்களிலும் இங்கு வழிபாடு மிகவும் பிரபலமாக இருக்கும், மேலும் மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிசேகம் போன்ற நாட்களிலும் சனி தோஷ நிவர்த்திக்கான பூஜையானது நடைபெறும்.
மேலும் இறைவனை வழிபட்டு முழு நாள் விரதம் இருந்து ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குதல் போன்றவைகளும் ஒவ்வொரு மாத சிவராத்திரியின் போதும் வழக்கமாக நடைபெறும், இதனால் பிரதோச நாட்களில் இங்கு கூட்டமானது களை கட்டும்.
அதாவது சனீஸ்வரனின் பிடியில் இருந்து விடுபட எண்ணிய மன்னன் நளன் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வர சிவபெருமானை வணங்கி சனீஸ்வரன் பிடியில் இருந்து தப்பினார், அதனால் சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர் எனப் புராணம் கூறுகின்றது.


Your comment will be visible after approval.