கேரளாவில் சிங்க மாதமான முதல் நாள் ஓணம் பண்டிகையானது கொண்டாடப்படுகின்றது, இந்த ஓணம் பண்டிகையானது பல வகையான போட்டிகள் பலகாரங்கள், புத்தாடைகள் என விமரிசையாகக் கொண்டாடுகின்றனர்.
அதாவது ஓணத்தன்று விரதம் இருந்து கடவுளை வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது வழக்கமாகும். குழந்தை வரம் வேண்டுவோர், திருவோண தினத்தில் பெருமாளை வணங்கி அவரின் அனுகூலத்தைப் பெற விரதம் இருப்பர்.
அந்த விரதத்தினை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது தமிழ் மாதத்தின்படி ஆண்டின் கடைசி மாதத்தின் கடைசி நாளின் பல வகையான உணவுகளுடன் இரவு உணவு உண்டு, மறுநாள் கேரள புத்தாண்டு அன்று காலையில் எழுந்து விரதத்தினைத் துவங்குதல் வேண்டும்.
மேலும் காலையில் வீட்டினை சுத்தம் செய்து, கழுவி, நாமும் குளித்து பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு அலங்காரம் செய்தல் வேண்டும், மேலும் புத்தாடை உடுத்தி பலகாரங்களை செய்து இறைவனுக்குப் படைத்தல் வேண்டும்.
அடுத்து மலர்களால் ஆன மாலையை பெருமாளுக்கு அணிவித்து, பெருமாளுக்கு உகந்த மந்திரங்களைப் பாடி அனுகூலத்தைப் பெற வேண்டும். பின்னர் மாலை பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்து விரதத்தினை முடிக்க வேண்டும்.


Your comment will be visible after approval.