Tomato Soup
தக்காளி சூப் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
- 5 to 6 தக்காளி
- 1 பல் பூண்டு
- 1 மேஜைக்கரண்டி சோள மாவு
- 1 மேஜைக்கரண்டி சர்க்கரை
- 1 மேஜைக்கரண்டி Fresh Cream
- ¼ மேஜைக்கரண்டி கருப்பு மிளகு தூள்
- ½ மேஜைக்கரண்டி Oregano
- 1 மேஜைக்கரண்டி ரெட் சில்லி ஃப்ளேக்ஸ்
- 1 மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
- 3 to 4 துளசி இலை
- தேவையான அளவு Soup Sticks
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு வெங்காயத் தாள்
செய்முறை :
முதலில் பூண்டை பொடி பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும். தக்காளியை நன்கு கழுவி ஒரு கத்தியின் மூலம் செங்குத்தாக பாதி அளவு வெட்டி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு ஜாரை எடுத்து அதில் தண்ணீர் பிடித்து அதை Fridge ல் வைக்கவும். அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி அதை கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் கொதித்ததும் அதில் நாம் வெட்டி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு தக்காளியை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதில் நாம் Fridge ல் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து ஊற்றவும். பின்னர் தக்காளியின் தோலை உரித்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளவும்.
பிறகு தக்காளியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும். பின்பு அதை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
இப்பொழுது ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும். பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வடிகட்டி வைத்திருக்கும் தக்காளி சாறை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை சுட வைக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் கருப்பு மிளகு தூள், Oregano, ரெட் சில்லி ஃப்ளேக்ஸ், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சர்க்கரையை போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் 3 லிருந்து 4 துளசி இலையை சேர்த்து அது நன்கு கலந்து விட்டு அதை சுமார் ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும். (250ml தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும். துளசி இலையை விரும்பாதவர்கள் அதை போடாமல் தவிர்த்து விடலாம்.)
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு சோள மாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அதை கரைத்து அதை கொதித்து கொண்டிருக்கும் தக்காளி சூப்பில் சேர்த்து நன்கு கலந்து விட்டு சூப் நன்கு கெட்டியாக ஆகும் வரை அதை கொதிக்க விடவும்.
அடுத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு Fresh Cream ஐ சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சூப்பை கொதிக்க விடவும். சூப் நன்கு கெட்டியானதும் அதில் சிறிதளவு வெங்காயத் தாளை தூவி அதை நன்கு கலந்து விட்டு அடுப்பை அணைத்து விட்டு அதை கீழே இறக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைக்கவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் தக்காளி சூப் தயார்.


Your comment will be visible after approval.