Mushroom
காளான் கிரேவி செய்வது எப்படி
காளான் கிரேவி செய்ய தேவையான பொருட்கள் :
- 500 கிராம் மஷ்ரூம்
- 3 பெரிய வெங்காயம்
- 3 தக்காளி
- 2 பச்சை மிளகாய்
- 6 பல் பூண்டு
- 2 துண்டு இஞ்சி
- 1 துண்டு பட்டை
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ½ மேஜைக்கரண்டி சோம்பு
- 1 மேஜைக்கரண்டி சீரக தூள்
- 1 மேஜைக்கரண்டி தனியா தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
காளான் கிரேவி செய்முறை :
முதலில் மஷ்ரூம், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், மற்றும் சோம்பை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்த்து தக்காளி நன்கு மசியும் வரை அதை வதக்கவும்.
தக்காளி நன்கு மசிந்தவுடன் அதில் மஞ்சள் தூள், சீரக தூள், தனியா தூள், அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் மஷ்ரூம்மை சேர்த்து அது நன்கு மசாலாவோடு ஓட்டுமாறு அதை பக்குவமாக கிளறி விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 12 நிமிடம் வரை வேக விடவும்.
10 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து அதை நன்கு ஒரு கிளறு கிளறி விட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (3 கையளவு தண்ணீர் தெளித்தால் சரியாக இருக்கும்.)
பின்பு அதில் கரம் மசாலா மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை அதை வேக விடவும்.
ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு மஷ்ரூம் மசாலா எடுத்து ஒரு தட்டில் வைத்து உங்களுக்கு பிடித்த உணவுடன் சேர்த்து சாப்பிடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான காளான் கிரேவி தயார்.


Your comment will be visible after approval.