Cauliflower
காலிஃப்ளவர் பக்கோடா
தேவையான பொருட்கள் :
- ½ கப் கடலை மாவு
- ¼ கப் அரிசி மாவு
- ¼ கப் சோள மாவு
- 1 முழு காலிஃப்ளவர் பூ
- 1 பெரிய வெங்காயம்
- 1 பச்சை மிளகாய்
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 1 சிட்டிகை கேசரி பவுடர்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிதளவு கருவேப்பிலை
செய்முறை :
முதலில் காலிஃப்ளவர், வெங்காயம், மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும். மற்றும் இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு Pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காலிஃப்ளவரை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்ட பின் அதில் சிறிதளவு உப்பு மற்றும் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு ஒரு மூடி போட்டு அதை சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு காலிஃப்ளவரில் இருக்கும் தண்ணீரை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி காலிஃப்ளவரை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு Bowl லை எடுத்து அதில் கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு, ஒரு சிட்டிகை கேசரி பவுடர், தேவையான அளவு உப்பு, மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து அதை நன்கு கலந்து விடவும்.
பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி அதை நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
மாவு பஜ்ஜி மாவு பதத்திற்கு வந்ததும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
அடுத்து ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இந்த காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்ட பின் கடாயின் அளவிற்கேற்ப அதில் காலிஃப்ளவரை எடுத்து பக்குவமாக எண்ணெய்யில் போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை பொரிக்கவும்.
காலிஃப்ளவர் பக்கோடா நன்கு பொன்னிறமானதும் அதை எடுத்து எண்ணெய்யை நன்கு வடித்த பின்பு ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு எண்ணெய் சூடாக இருக்கும்போதே அதில் ஒரு கையளவு கறிவேப்பிலையை அதில் போட்டு அதை பொரித்து எடுத்து காலிஃப்ளவர் பக்கோடாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட்டு அதை சுட சாப்பிடவும்.
இப்போது உங்களுக்கு சூடான மற்றும் மிகவும் சுவையான காலிஃப்ளவர் பக்கோடா தயார்.


Your comment will be visible after approval.