சனி தரக்கூடிய அற்புதமான நற்பலனை நினைத்து மகிழாமல். தீமையை மட்டும் கண்டு மக்கள் பயப்படுகின்றனர்.
Table (toc)
அற்புத பலன் தரும் சனி பகவான்
சனி பகவான் மிகவும் நல்லவர் தான், இருப்பினும் யார் ஒருவர் தன் எண்ணத்தில் சனியன் என வந்துவிட்டால், அவர் வார்த்தையில் அப்படி சனியனே என வந்துவிடும். அப்படி சனியனே என திட்டுவது மிகவும் ஆபத்தானது. அப்படி திட்டுவதால் நன்றாக இருக்கும் வாழ்க்கையில் கூட பல சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும். அதன் பின் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை.
கண் கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வது போல தான். பொதுவாக எந்த கிரகமும் முழுவதுமாக நன்மையோ அல்லது முழுவதும் கெடுதலோ செய்யாது என்கிறது ஜோதிட விதி.
ஆனால் சனி பகவானைப் பார்த்தாலோ அல்லது சனி பெயர்ச்சி என்றாலோ உடனே பலரும் பதறுகின்றனர். காரணம் அவர் தீங்கு மட்டும் செய்வார் என நினைப்பதால் தான்.
சனி பகவான் நீதி தேவன். இவர் யாருக்கும் பாரபட்சம் பார்க்காமல் நல்லது செய்ததற்கும் நன்மையும், கெட்டதற்கும் ஏற்ற கெடுபலனும் தரக்கூடியவர். இருப்பினும் அவர் தரக்கூடிய அற்புதமான நற்பலனை நினைத்து மகிழாமல். தீமையை மட்டும் கண்டு மக்கள் பயப்படுகின்றனர்.
அதனால் அவருக்கு கெட்ட பெயரே மிஞ்சியது. கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர், நீதி அரசர் சனி பகவான்தான்.
தனக்கு ஏற்படும் கெட்ட பெயரை நினைத்து வருந்திய சனி பகவான் திருக்கொள்ளிக்காடு வந்து சிவபெருமானை நினைத்து கடும் தவம் புரிந்தார். அவர் முன் தோன்றிய சிவனை இவரை பொங்கு சனியாக மாற்றினார். இங்கு அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார் சனி பகவான்.
சனி பகவான் ஒரு மந்தமான கடவுள் என்பதால் அவருக்கு "மாந்தன்" என்ற பெயரும் உண்டு. சனி பகவான் மந்தகதியாக இருப்பது இயற்கையின் விதி. அதனால் இவர் மற்ற கிரகங்களை விட சூரியனை மிகவும் மெதுவாக சுற்றி வருகிறார்.
வீட்டில் குழந்தை சரியாக படிக்கவில்லை என்றாலோ, சோம்பலாகவே இருக்கிறது என்றாலோ ஏன் மந்தமாக இருக்கிறாய் என்று தான் கேட்பதுண்டு. அப்படி மந்தகதி உள்ளவர்களுக்காகச் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்.
திருக்கொள்ளிக்காடு அக்னீசுவரர் திருக்கோயிலில் உள்ள சனிபகவானை வழிபட்டால் மந்த குழந்தைகள் சுறுசுறுப்படைவர்.
குழந்தை என்ன சேஷ்டை செய்தாலும் அவர்களை சனியன் என்று மட்டும் திட்ட வேண்டாம், அதனால் சனி பகவானின் கெடு பார்வை உங்கள் மீது விழ நேரிடும். மந்தகதி உள்ளவர்களைப் பக்குவமாகப் பேசி திருத்துபவர்களுக்கு சனியின் அருள் கிடைக்கும்.
பல வீடுகளில் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் சொல் பேச்சு கேட்காவிட்டால், அடம்பிடித்தால், ஏதேனும் தவறான செயல்களை செய்துவிட்டால் அவர்களை சனியனே என திட்டுவதுண்டு.
ஆனால் அப்படி உங்கள் பிள்ளைகளையோ, வேறு யாரையும் சனியனே திட்டினால் அதனால் ஆபத்து உங்களுக்குத் தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி சனியனே என திட்டுவதால் சனி பகவான் கோபமடைந்து அப்படி திட்டுபவர் மீது தன் முழு பார்வையை செலுத்தி விடுவார் என்பது ஐதீகம்.
சனீஸ்வரரை எப்படி வழிபட வேண்டும்?
அம்மன் சன்னதிக்குச் சென்ற பின்பு தான் சனீஸ்வரர் சன்னதிக்குச் செல்ல வேண்டும். சிலர் எடுத்ததும் சனீஸ்வரன் சன்னிதிக்குச் செல்வார்கள். அப்படி சென்று வழிபடுவது முறையான வழிபாடு கிடையாது. இங்கு இருக்கின்ற இறைவனைப் பார்த்த பிறகு, சனி பகவானைச் சென்று வழிபட்டால் தான் சனிதோஷம் முற்றிலும் நீங்கப் பெறுவீர்கள்.
சனி பகவான் மந்திரம்
"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ" 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.சனி ஸ்தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில் ஸ்தோத்திரம்
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
தொண்டு
சனிக்கிழமையன்று நன்கொடையாக ஒரு எருமை அல்லது எள் விதைகள் கொடுக்கவேண்டும்.நோன்பு நாள்: சனிக்கிழமை.
பூஜை: அனுமான் பூஜை.
ருத்ராட்சம்: 14 முக ருத்ராட்சம் அணியவேண்டும்.
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹிதந்நோ மந்த: ப்ரசோதயாத்.
சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.


Your comment will be visible after approval.