ஆந்தையை பார்த்தால் அதிர்ஷ்டமா ? ஆபத்தா ?
Table (toc)
- ஆந்தை மீதான நம்பிக்கை
நீங்கள் ஒரு பயணம் மேற்கொள்ளும் போது, நீங்கள் போகும் வழியில் ஆந்தையைப் பார்த்தால், பணம் கிடைக்கும் என்றும், அதே போல் ஆந்தை வீட்டிற்கு வந்தால், அது தீங்கு விளைவிக்கும் என்றும், வீட்டின் முன்னேற்றத்தை நிறுத்துவதாக இருக்கும் என கருதப்படுகிறது. எந்த நேரத்தில் எந்த நிற ஆந்தையைப் பார்த்தால் சுப மற்றும் அசுப பலனைத் தரும் என்பதை விரிவாக பார்ப்போம்.
- ஆந்தையைப் பார்த்தால்
ஆந்தையை அடிக்கடி பார்ப்பதால் உங்கள் வாழ்வில் திடீர் மகிழ்ச்சி வந்துசேரும். பல வழிகளிலிருந்து பணம் வந்து சேரும்.
மறுபுறம் நீங்கள் வேலைக்கு செல்லக்கூடிய இடங்களில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் சுபமானதாகவே கருதப்படுகிறது. நீங்கள் மேற்கொண்ட வேலை வெற்றிகரமாக நிறைவேறும்.
இருப்பினும் நீங்கள் நிற்கக்கூடிய இடத்தில் உங்கள் வலது பக்கத்தில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அது நல்லது என்றாலும், நீங்கள் சிறிது நேரம் காத்திருந்து அங்கிருந்து செல்லவும், அல்லது உங்கள் வேலையைத் தொடரலாம்.
- பகலில் ஆந்தையைப் பார்த்தால்
நீங்கள் பகலில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அது அதிர்ஷ்டம் தருவதாக கருதப்படுகிறது. அதிர்ஷ்டம் உங்களுக்கு ஆதரவாக தயாராக உள்ளது என்று அர்த்தம். மேலும், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நடக்கப் போகிறது மற்றும் விரைவில் நல்ல செய்தி தேடி வரும்.
பகல் நேரத்தில் அல்லது வேலை நேரத்தில் ஒரு ஆந்தை பறந்து செல்வது பார்த்தால், நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் சரியானதாக இருக்கும். அல்லது நீங்கள் எங்கு தவறு செய்கிறீர்கள், உங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வீர்கள்.
- இரவில் ஆந்தையைப் பார்த்தால்
இரவு நேரத்தில் ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால் அதுவும் பல வகையில் நன்மையைத் தரும் என கருதப்படுகிறது. அனைத்து பிரச்சினைகளிலிருந்து உங்களை தீர்வு கிடைக்கும். தொழில் முன்னேற்றம் ஏற்படும்.
இரவு நேரத்தில் ஆந்தையின் அலறல் குரல் கேட்டால் உங்கள் துறையில் நன்மையும், வெற்றியும் பெறுவீர்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
- வெளியே செல்லும் போது ஆந்தையைப் பார்த்தால்
நீங்கள் எங்கேயாவது வெளியே செல்லும் போது அல்லது கடன் தொகையை வசூலிக்கச் செல்லும் போது ஆந்தையைப் பார்க்க நேர்ந்தால், அப்போது மற்றவர்களிடம் சிக்கியுள்ள உங்கள் கடன் தொகை வசூலிப்பீர்கள்.
உங்கள் செயலில் வெற்றி ஏற்படும். உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான ஒரு புதிய வழி கிடைக்கும். விரைவில் உங்களுக்கு மகிழ்ச்சியும் அமைதியும் கிடைக்கும்.
- கனவில் ஆந்தையைப் பார்த்தால்
ஆந்தை ஒரு நோயாளியின் மீது அமர்ந்தால் அல்லது அவரின் மேல் பறந்தால், மிகக் கடுமையான நோய்கள் கூட குணமாகும் என்று கூறப்படுகிறது.
அதே நேரத்தில், கனவுகளில் ஆந்தையைக் கண்டால் உங்கள் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று அர்த்தம். அதே சமயத்தில், உங்களில் அறிவு அதிகரிக்கும் உங்கள் சொந்த திறன் அதிகரிக்கும்.
- வெள்ளை நிற ஆந்தையைப் பார்த்தால்
வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பது மிகவும் நல்லதாகக் கருதப்படுகிறது. வெள்ளை ஆந்தைகள் அரிதாகவே காணப்பட்டாலும், அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால், அதனால் உங்கள் வாழ்க்கையின் பிரச்சினைகள் முடிவடையும்.
உங்கள் வாழ்க்கையில் பிரச்னை நிறைந்ததாக இருந்தால், வெள்ளை நிற ஆந்தையைப் பார்ப்பதால் சில நேர்மறை ஆற்றலைப் பெறலாம். இது உங்கள் மூதாதையர்கள் தொடர்புடையதாகப் பார்க்கப்படுவதால் பயப்படத் தேவையில்லை.


Your comment will be visible after approval.