Rice Kheer Recipe
தேவையான பொருட்கள் :
- 1 லிட்டர் பால்
- 100 கிராம் சர்க்கரை
- 50 கிராம் அரிசி
- 1 தேக்கரண்டி ஏலக்காய்
- தேவையான அளவு குங்குமப்பூ
- தேவையான அளவு முந்திரி
- தேவையான அளவு திராட்சை
- தேவையான அளவு பாதாம்
- 1 தேக்கரண்டி கிஸ்மிஸ்
செய்முறை :
Step 1: அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த அரிசியை ஒரு கிண்ணத்தில் எடுத்து 10 முதல் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
Step 2: பாயசம் அடிபிடிக்காமல் இருக்க, ஒரு பானில் சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் அதில் பாலையும் சேர்த்து கொதிக்க விடவும்.
Step 3: இப்போது அதில் குங்குமப்பூ இழைகளையும் சேர்த்து, பானில் அடி பிடிக்காமல் இருக்க, தொடர்ந்து கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். அப்படியே 5 நிமிடங்கள் வரை வேகவிடவும்.
Step 4: நாம் ஏற்கனவே ஊறவைத்த அரிசியிலிருந்து தண்ணீரை வடித்து கொதிக்கும் பாலில் அரைத்த அரிசியை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். அரிசி முழுதாக வேகும் வரை 10 முதல் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
Step 5: பால் கெட்டியாகத் தொடங்கியதும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை முழுவதுமாக கரைந்த பிறகு, முந்திரி, திராட்சை, பாதாம், ஒரு சிட்டிகை ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்க்கவும்.
Step 6: 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான அரிசி பாயாசத்தை சூடாகவும் அல்லது ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று குளிர்ச்சியாகவும் உங்கள் ரசனைக்கேற்ப பரிமாறலாம்.

Your comment will be visible after approval.