Moong Dal Vada
தேவையான பொருட்கள் ;- 1 கப் பச்சைப்பயறு
- 1 கைப்பிடியளவு கொத்தமல்லி இலை
- 3 Numbers பச்சை மிளகாய்
- தேவையான அளவு பூண்டு பேஸ்ட்
- தேவையான அளவு இஞ்சி பேஸ்ட்
- தேவையான அளவு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு வெங்காய தாழ்
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி விதை
செய்முறை :
Step 1: ஒரு பாத்திரத்தில் பச்சை பயிறு எடுத்து மூன்றில் இருந்து நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்பு ஊறவைத்த பச்சை பயிறு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை மிக்சியில் சேர்த்து கெட்டியாக கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
Step 2: பிறகு அரைத்து வைத்துள்ள பச்சை பயிறு கலவையில் வெங்காய தாழ், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, அரை டீஸ்பூன் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.
Step 3: ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கலந்து வைத்த மாவை சிறியதாக உருட்டி, வடை போல தட்டி எண்ணையில் போட்டு பொன்னிறமாக மாறும் வரை பொறித்து எடுக்கவும்.
Step 4: இந்த சுவையான மூங் தால் / பச்சை பயிறு வடையை சட்னி அல்லது சாஸுடன் சேர்த்து ஒரு மாலை சிற்றுண்டாக உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிமாறவும்.

Your comment will be visible after approval.