Pesarattu Dosa
தேவையான பொருட்கள் :
- 1 கப் பாசிபயிறு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 inch இஞ்சி
- 5 Numbers பச்சை மிளகாய்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு நீர்
செய்முறை :
ஒரு மிக்ஸி ஜாரில் பாசிப்பயிறு, இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்ததை ஒரு பெளலிற்கு மாற்றி தண்ணீர் ஊற்றி தோசை பதத்திற்கு கலந்து கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் தோசை மாவை எடுத்து ஊற்றுங்கள். தோசையை வார்த்துக் கொள்ளுங்கள்.
தோசை நன்றாக பொன்னிறமாக மாறும் வரை சுட வேண்டும்.
இந்த தோசையை தேங்காய் சட்னி அல்லது உங்களுக்கு பிடித்த சட்னியுடன் தொட்டு சாப்பிடுங்கள். சுவையும் சூப்பராக இருக்கும். உடம்புக்கும் சத்தாயிற்று. மொறு மொறுப்பான பெசரட்டு (பாசிப்பயிறு) தோசை ரெடி.

Your comment will be visible after approval.