Cucumber Pachadi
தேவையான பொருட்கள் :
- 2 Numbers துருவிய வெள்ளரிக்காய்
- 1 கப் துருவிய தேங்காய்
- 2 தேக்கரண்டி எண்ணெய்
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி கடுகு
- தேவையான அளவு கறிவேப்பிலை
- 6 Numbers பச்சை மிளகாய்
- தேவையான அளவு பெருங்காயம்
- தேவையான அளவு உப்பு
செய்முறை :
துருவிய தேங்காய் , பச்சை மிளகாய் , கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயம் எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பேன் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கடுகு, சீரகம் , பெருங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.தனியாக ஒரு கிண்ணத்தில் துருவிய வெள்ளரிக்காய் மற்றும் அரைத்த விழுது ஆகியவற்றை சேர்த்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
இதில் ஏற்கனவே தாளித்து வைத்திருக்கும் பொருட்களை சேர்த்து கலக்கவும்.சப்பாத்தி அல்லது சாதத்துடன் இந்த கலவையை பரிமாறலாம்.

Your comment will be visible after approval.