Chettinad Pepper Chicken
தேவையான பொருட்கள் :
1) 500 கிராம் கோழி
2) 1 தேக்கரண்டி எண்ணெய்
3) 2 Numbers நறுக்கிய வெங்காயம்
4) 2 Numbers தக்காளி
5) 3 Numbers பச்சை மிளகாய்
6) 1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்
7) 1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்
8) 1 1/2 தேக்கரண்டி மிளகு
9) 1/4 கிராம் மஞ்சள்
10) தேவையான அளவு உப்பு
செய்முறை :
ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் சேர்த்துக்கோங்க. எண்ணெய் சூடேறியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்குங்க. இப்போது அதில் நறுக்கிய தக்காளிகளை சேர்த்து கிளறி விடுங்க.
கடாயிலிருக்கும் வெங்காயமும் தக்காளியும் சீக்கரமா வேக அதில் உப்பை சேர்த்துக்கோங்க. 4 முதல் 5 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவிடுங்க.
இஞ்சி – பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூளையும் கடாயில் சேர்த்து எல்லா பொருட்களையும் நல்லா கலந்து விடுங்க. இப்போது இந்த கலவையை 5 முதல் 7 நிமிடங்கள் வேக வைங்க. அதன் பின் கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்க்கவும்.
கடாயின் மூடியை மூடி, சிக்கனிலுள்ள சாறு முழுசா வற்றிப் போய் சிக்கன் மென்மையாகும் வரை வேக வெச்சுக்கோங்க. கேஸை ஆஃப் பண்ணிட்டு, இதை சாதம், சப்பாத்தி போன்றவற்றோடு சைட் டிஷ்ஷாக பரிமாறுங்க.
Your comment will be visible after approval.