Cucumber Raita
தேவையான பொருட்கள் :
- 250 கிராம் தயிர்
- தேவையான அளவு வறுத்த வேர்க்கடலை
- 2 Numbers வெள்ளரிக்காய் பிரதான உணவு
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு சர்க்கரை
- கறிவேப்பிலை
- 1 தேக்கரண்டி உளுந்து பருப்பு
- 1 தேக்கரண்டி சீரகம்
- தேவையான எண்ணெய்
செய்முறை :
வெள்ளரிக்காயை தோலுரித்து அதை நன்றாக துருவிக் கொள்ளுங்கள். கொஞ்சம் மென்மையான வெள்ளரிக்காயை தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள்.
வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்
ஒரு பெளலில் தயிர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். இப்பொழுது அதனுடன் துருவிய வெள்ளரிக்காய் சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு, சர்க்கரை பவுடர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், உளுந்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
இப்பொழுது தாளித்ததை எடுத்து ரைதாவில் சேருங்கள். நன்றாக கலந்து சுடச்சுட பிரியாணியுடன் பரிமாறுங்கள். சாப்பிட தொட்டுக்க இரண்டுக்குமே சூப்பராக இருக்கும்.
Your comment will be visible after approval.