ரோட்டி அல்லது நானுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது இந்த கிரேவி மிக அருமையாக இருக்கும். மேலும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதை ஜீரா ரைஸ் அல்லது புலாவோவுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள் :
- 7 Numbers வேகவைத்த உருளைக்கிழங்கு
- 2 Numbers தக்காளி விழுது
- 5 Numbers முந்திரி
- தேவையான அளவு மஞ்சள் தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு உப்பு
- 1 Numbers பச்சை மிளகாய்
- 1 Numbers இஞ்சி
- 2 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
- 2 தேக்கரண்டி கரம் மசாலா தூள்
- 1 தேக்கரண்டி வெந்தய விதைகள்
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு மஞ்சள் தூள்
- தேவையான அளவு பெருங்காயம்
- தேவையான அளவு கஸ்துரி மேத்தி
- 1 Numbers கருப்பு ஏலக்காய்
- 1 Numbers கருவாப்பட்டை குச்சி
- 1 Numbers கிராம்பூ
- 3 Numbers மிளகு
- 3 தேக்கரண்டி எண்ணெய்
- 1 Numbers சிவப்பு மிளகாய்
- 1 தேக்கரண்டி சீரகம்
செய்முறை :
Step 1: ஒரு மிக்சியில் 2 தக்காளி மற்றும் முந்திரி சேர்த்து ஒரு பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து தனியாக கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.
Step 2: மசாலா உள்ளே இறங்க வேகவைத்த உருளைக்கிழங்கில் ஃபோர்க் ஸ்பூன் வைத்து குத்திவிடம்.
Step 3: ஒரு பாத்திரத்தில் ஃபோர்க் ஸ்பூன் வைத்து குத்திய உருளை கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக கலக்கவும்.
Step 4: ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் மசாலா கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 2 நிமிடம் கழித்து உருளைக்கிழங்கை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளவும்.
Step 5: அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். எண்ணெய் காய்ந்தவுடன் அதில் பெருங்காயம், சீரகம், மிளகு, ஏலக்காய் மற்றும் நசுக்கி வைத்துள்ள இஞ்சி பச்சை மிளகாய் பேஸ்டை சேர்த்து வதக்கவும். ஒரு நிமிடம் கழித்து தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
Step 6: இதை 4-5 நிமிடங்கள் சமைத்த பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் நொறுக்கப்பட்ட கஸ்துரி மேத்தி சேர்த்து தக்காளியின் பச்சை வாசனை நீங்கும் வரை சமைக்கவும். மேலும் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
Step 7: கிரேவி நன்றாக கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் சமைத்த உருளைக்கிழங்கை சேர்த்து குறைந்த தீயில் கிளறவும். பிறகு அதில் கரம் மசாலாவை சேர்த்து கிரேவி கெட்டியாகும் வரை சமைக்கவும்.
Step 8: இந்த சுவையான தம் ஆலூ கிரேவியை, உங்களுக்கு விருப்பமான ரோட்டி அல்லது குல்ச்சாவுடன் சேர்த்து பரிமாறவும்.

Hi
ReplyDeleteThank you
DeleteSuper
ReplyDeleteYour comment will be visible after approval.