Chicken Kothu Parotta Recipe in Tamil
சிக்கன் கொத்து பரோட்டா
தேவையான பொருட்கள் :
- 3 பரோட்டா
- 12 to 15 சிக்கன் துண்டுகள்
- 2 முட்டை
- 2 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 பச்சை மிளகாய்
- 3 பூண்டு பல்
- 1 மேஜைக்கரண்டி மிளகுத் தூள்
- மிளகாய் தூள் தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- சிறிதளவு கறிவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை :
- முதலில் வெங்காயம் நீளவாக்கில் சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும் .
- தக்காளி, பச்சை மிளகாய், பூண்டை முன்றையும் தனி தனியாக பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- சிக்கனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- பின்பு பரோட்டாவை கடையில் வாங்கியோ அல்லது வீட்டிலே செய்தோ அதையும் சிறு சிறு துண்டுகளாக கைகளின் மூலம் பிய்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும்.
- அடுத்து ஒரு PAN ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் இரண்டு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய்யை சுட வைக்கவும்.
- எண்ணெய் சூடேறியதும் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய், மற்றும் சிறிதளவு கருவேப்பிலையை போட்டு அதை நன்கு வதக்கவும்.
- பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, தேவையான அளவு உப்பு, அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூள், மற்றும் ஒரு மேஜைக்கரண்டி அளவு மிளகு தூள் சேர்த்து அதை நன்கு கிளறி தக்காளி நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் PAN ன் நடுவே ஒரு மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதில் 2 முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து விட்டு அதை தக்காளியுடன் சேர்த்து கலந்து விடவும்.
- அடுத்து அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்திருக்கும் சிக்கனை போட்டு நன்கு கிளறி அதை சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
- 2 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் சிறு சிறு துண்டுகளாக ஆக்கி வைத்திருக்கும் பரோட்டாவை போட்டு நன்கு கிளறி விடவும்.
- பின்பு அதை இறக்குவதற்கு முன் சிறிதளவு கொத்தமல்லியை அதில் தூவி ஒரு கிளறு கிளறி அதை ஒரு BOWL க்கு மாற்றவும்.
இப்போது சுவையான சிக்கன் கொத்து பரோட்டா ரெடி.
#Chicken Kothu Parotta Recipe in Tamil*


Your comment will be visible after approval.