Appam Coconut Milk Recipe in Tamil
தேங்காய் பால் ஆப்பம் செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
- 1 கப் இட்லி அரிசி
- 2 கப் பச்சரிசி
- 1 கப் துருவிய தேங்காய்
- 1 தேங்காய்
- 1 மேஜைக்கரண்டி உளுத்தம் பருப்பு
- ½ மேஜைக்கரண்டி வெந்தயம்
- ½ மேஜைக்கரண்டி ஏலக்காய் தூள்
- ½ மேஜைக்கரண்டி சர்க்கரை
- தேவையான அளவு உப்பு
செய்முறை :
- ஆப்பம் செய்வதற்கு முந்தைய நாளில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம் பருப்பு, மற்றும் வெந்தயத்தை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை சுமார் 4 மணி நேரம் வரை ஊற விட்டு பின்பு அவை அனைத்தையும் ஒரு மிக்ஸி ஜாரிலோ அல்லது கிரைண்டரிலோ போட்டு நன்கு நைஸாக அரைத்து கொள்ளவும்.
- இப்பொழுது தேங்காய் பால் செய்வதற்கு தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் அரை மேஜைக்கரண்டி அளவு ஏலக்காய் தூளையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- அடுத்து இந்த அரைத்த தேங்காயை ஒரு வடிகட்டியின் மூலம் வடிகட்டி அதிலிருக்கும் தேங்காய் பாலை பிரித்தெடுத்து அதை ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்..
- பிறகு நாம் அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் சர்க்கரை, சிறிதளவு உப்பு, மற்றும் நாம் செய்து வைத்திருக்கும் தேங்காய் பாலை கொஞ்சம் கொஞ்சமாக அதில் ஊற்றி அதை தோசை மாவை விட சிறிதளவு கெட்டியான பதத்திற்கு கொண்டு வரவும். (மாவு அதிகம் கெட்டியாக இருந்தால் அது சீக்கிரமாக புளிக்காது.)
- பின்னர் மாவு இருக்கும் பாத்திரத்தில் ஒரு மூடியை போட்டு அதை அப்படியே வைத்து சுமார் 6 லிருந்து 8 வரை புளிக்க விடவும். 8 மணி நேரத்திற்கு பிறகு மூடியை திறந்து பார்த்தால் மாவு நன்கு பொங்கி வந்திருக்கும்.
- இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் எண்ணெய்யை தடவி அதை சுட வைக்கவும். கடாய் சிறிது சூடானதும் அதில் ஒரு கரண்டி அளவு மாவை எடுத்து ஊற்றி கடாயை ஒரு இடுக்கியின் மூலமோ அல்லது ஒரு துணியின் மூலமோ பிடித்து பக்குவமாக சுற்றி மாவை பரப்பி விடவும்.
- பிறகு கடாயில் ஒரு மூடியை போட்டு அதை சுமார் 1 லிருந்து 2 நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு தேங்காய் பால் ஆப்பத்தை ஒரு தட்டில் எடுத்து வைத்து அதில் தேங்காய் பாலை ஊற்றி அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சுவையான மற்றும்
உடம்புக்கு மிகவும் நன்மையான தேங்காய் பால் ஆப்பம் தயார்.
#Appam Coconut Milk Recipe in Tamil*


Your comment will be visible after approval.