Chicken Gravy Recipe in Tamil
சிக்கன் கிரேவி செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் :
- 500 கிராம் சிக்கன்
- 1 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 3 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 6 to 7 காய்ந்த மிளகாய்
- 8 to 10 முந்திரிப் பருப்பு
- 1 துண்டு பட்டை
- 3 கிராம்பு
- 2 ஏலக்காய்
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- ½ மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 2 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி கசூரி மேத்தி
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு எண்ணெய்
- தேவையான அளவு உப்பு
செய்முறை :
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நறுக்கி, இஞ்சி பூண்டை பேஸ்ட் ஆக்கி, மற்றும் சிக்கனை நன்கு சுத்தம் செய்து கழுவி அதை ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு PAN ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் காய்ந்த மிளகாய் மற்றும் முந்திரி பருப்பை போட்டு முந்திரி பருப்பு லேசாக பொன்னிறமாகும் வரை அதை வறுக்கவும்.
முந்திரி பருப்பு லேசாக பொன்னிறமானதும் அடுப்பை அணைத்து விட்டு அதை எடுத்து அப்படியே ஒரு தட்டில் வைத்து சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை அப்படியே ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு கரகரப்பான பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.
பின்பு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை போட்டு அதை நன்கு பேஸ்ட்டாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை மிதமாக சூடேற்றி அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும். எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, கிராம்பு, மற்றும் ஏலக்காயை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் செய்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் லேசாக தண்ணீர் தெளித்து மசாலாவை நன்கு கிண்டி விட்டு பின்பு அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து சிக்கன் நன்கு மசாலாவோடு சேருமாறு அதை கிளறி விட்டு மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை அதை வேக விடவும். (எண்ணெய் பிரிந்து வருவதற்கு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் எடுக்கலாம்.)
மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 5 லிருந்து 6 நிமிடம் வரை கொதிக்க விடவும்.
6 நிமிடத்திற்கு பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 12 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து சிக்கன் கிரேவியை ஒரு கிளறு கிளறி பின்பு அதில் கரம் மசாலா மற்றும் கஸ்தூரி மேத்தியை சேர்த்து அதை நன்கு கலந்து விட்டு சுமார் 2 லிருந்து 3 நிமிடம் வரை கொதிக்க விடவும். 3 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிக்கன் கிரேவியை சப்பாத்தி அல்லது பரோட்டாவுடன் சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும்
மிகவும் அட்டகாசமாக இருக்கும் சிக்கன் கிரேவி தயார்.

Your comment will be visible after approval.