மனிதனின் பரிணாம வளர்ச்சியை குறிக்கும் அறிவியல் அறிவு மிக்க தசாவதாரம்.!
ராமர் (சூரியன்)
தசாவதாரங்களுள் ரகு வம்சத்தில் தோன்றியவர் ராமபிரான். எனவே சூரிய வம்சத்தில் தோன்றிய ராமசந்திர மூர்த்தியை வழிபட சூரியனின் அருள் கிட்டும்.
சூரியன் ஆத்மாவுக்கு அதிபதி. பித்ரு காரகன் என்று போற்றப்படுபவர். எனவே ராமனை வழிபட பித்ரு தோஷங்கள் நீங்கி வளம் உண்டாகும்.
கிருஷ்ணர் (சந்திரன்)
மகாவிஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாகக் கருதப்படும் கிருஷ்ணாவதாரத்தை வழிபடச் சந்திரனால் உண்டாகும் தீமைகள் நீங்கும்.
நவகிரகங்களுள், வளர்பிறை சந்திரன் சுப கிரகமாகவும், தேய்பிறை சந்திரன் பாப கிரகமாகவும் விளங்குவார்.
சந்திரன் மனதிற்கு அதிபதி. எனவே கிருஷ்ணரை வழிபட மன சஞ்சலங்கள் நீங்கும், மன அமைதி கிடைக்கும்.
நரசிம்ம மூர்த்தி (செவ்வாய்)
உக்கிரமான அவதாரமான நரசிம்ம அவதாரம் செவ்வாய் கிரகத்துக்குரியது.
செவ்வாய், சகோதரர்கள், பூமி ஆகியவற்றுக்கு அதிபதி.
நரசிம்மரைத் தொழ இவற்றில் இருந்த சிக்கல்கள் நீங்கி, நிம்மதியான வாழ்வு கிட்டும்.
கல்கி அவதாரம் (புதன்)
இனி பகவான் எடுக்கப்போகும் கல்கி அவதாரம், புதனின் ஆதிக்கத்தோடு திகழப்போவது.
மற்ற அவதாரங்களை வணங்குதல் போல, கல்கி அவதாரத்தை மனதுள் தியானிப்பதன் மூலம் புத்திகாரகனான புத பகவானின் அருளினைப் பெறமுடியும்.
வாமனர் (குரு)
குள்ள வடிவாய் அவதரித்துப் பின் உலகளந்த பெருமாளாய் மாறி மாபலிக்கு அருள் செய்த பெருமாள், குரு பகவானுக்கு உரியவர்.
ஆதலால், வாமனரை வழிபட கல்வி விருத்தி உண்டாகும். புகழ் கிட்டும்.
பரசுராமர் (சுக்கிரன்)
பூர்ண சுபகிரகமாகக் கருதப் படும் சுக்கிரனின் அம்சமான பெருமாள் அவதாரம் பரசுராம அவதாரம்.
பரசுராமரை வணங்க, சகல வளங்களும் கிட்டும். சுக்கிரன் இல்லறத்துக்கு அதிபதி.
எனவே பரசுராமரை வழிபட விரைவில் இனிமையான இல்லறம் அமையும்.
கூர்ம மூர்த்தி (சனி)
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, விஷ்ணு கூர்மமாக அவதரித்து, மேரு மலையினைத் தாங்கி உதவினார் என்று கூர்ம புராணம் கூறுகிறது.
கூர்ம அவதாரத்தை வழிபட சனிபகவானால் உண்டாகும் கெடுபலன்கள் நீங்கி நல்லருள் கிடைக்கும்.
வராக மூர்த்தி (ராகு)
பூமியைக் காக்க பெருமாள் எடுத்த அவதாரம் வராக அவதாரம்.
வராக சுவாமியைத் தொழுதுகொள்வதன் மூலம், ராகு பகவனின் அருளைப் பெறலாம்.
மேலும் ராகுவால் ஏற்படக்கூடிய சகல தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.
மச்ச மூர்த்தி (கேது)
வேதங்களைக் காக்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் மச்சாவதாரம்.
நவகிரகங்களுள் ஞானத்துக்கு அதிபதி கேது.
எனவே ஞானத்தை இந்த உலகிற்கு அளித்த மச்சாவதாரத்தை வணங்குவதன் மூலம் கேது பகவானின் அருளைப் பரிபூர்ணமாகப் பெறமுடியும்.
எட்டாவது
பலராம அவதாரம்
எதற்காக: லட்சுமணனுக்கு, மரியாதை செலுத்த.
என்ன பலன்: சகோதர ஒற்றுமை, தாம்பத்ய வாழ்க்கை சிறக்கும்.
எந்த கோயில்: கேன்டாபாரா (ஒடிசா).
யாருக்கு சிறந்தது: மாந்தி என்னும் துணைக்கோளால் பாதிப்படைந்தவர்கள்.

Your comment will be visible after approval.