அந்த மாளிகை கட்ட கடக்கால் போட்ட நாளை ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட நேரம் சனி உச்சத்துல இருந்த நேரம்.. அதனால நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும் இந்த மாளிகை நிலைக்காது. அதனால நீங்களே இடிச்சுடுங்க"
இத கேட்ட பார்வதி செம்ம கடுப்ப்பாயிட்டாங்க. லோகத்துக்கே பெரிய சாமியோட பொண்டாட்டி நான். பிசாத்து சனி என்னோட மாளிகைய இடிக்கிறதா. நெவெர்... அப்படின்னு பொங்கல் வச்சாங்க.
புருஷன கூப்பிட்டு, "யோவ்..... நீ இப்போவே அந்த சனிய பார்த்து, இன்ன மாதிரி எம்பொண்டாட்டி ஒரு பங்களா கட்டி இருக்கா. அதுல நீ என்னவோ வேலை காட்ட போறியாம், அதெல்லாம் வேண்டாம்"ன்னு சொல்லிட்டு வா" ன்னாங்க.
உடனே சிவன் சொன்னார். புரிஞ்சுக்கோ பாரு..... நான் பெரிய சாமியா இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல. தவிர... சனி எப்போவுமே பெர்பெக்ட். நானே சொன்னா கூட அவன் மாத்தமாட்டான் ன்னு சொன்னார்.
புருஷன் சொன்னத எந்த பொண்டாட்டி தான் கேட்டிருக்கா. நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க?
சோ, சிவன பட்னி போட்டுட்டா. வேற வழி இல்லாம சனிய பார்க்கலாம்னு கிளம்பிட்டார்.
ஆனா, போறதுக்கு முன்னாடி பாருவ கூப்பிட்டு "இதோ பார் பாரு... உடனே நீ ஒரு பொக்லைன் ரெடி பண்ணி வை. நான் போய் சனிகிட்ட பேசி பார்க்கிறேன். அவன் ஒத்துகிட்டா ஒன்னும் பிரச்சினை இல்ல. இன்கேஸ் அவன் ஒத்துக்கலன்னா... நான் அங்க இருந்து என்னோட உடுக்கைய அடிக்கிறேன். நீ உடனே பொக்லைன் வச்சு மாளிகைய இடிச்சுடு.
யாரும் கேட்டா , எனக்கு டிசைன் புடிக்கல. வேற கட்ட போறேன்னு கெத்தா சொல்லிடு"ன்னு சொன்னார்.
சரின்னு பார்வதியும் ஒத்துகிட்டாங்க.
சிவன் சனிகிட்ட போய் " உன்கிட்ட கேக்க ஒரு மாதிரியாத்தான் இருக்கு. ஆனா வேற வழி இல்ல... இந்த பார்வதி பெரிய பிரச்சினை பண்றா... நாலுநாளா உலை கூட வைக்கல. உன்னால அந்த பில்டிங்க்கு ஏதும் பிரச்சினை வராம பார்த்துக்க" என்றார்.
உடனே சனி "அய்யனே... இதுக்கு நீங்க நேர்ல வரணுமா? ஒரு போன் பண்ணி இருக்கலாமே"ன்னு சொல்லிட்டு "நீங்களே சொன்னப்புறம் நான் எப்படிய்யா மறுக்க முடியும். சரி... நான் ஒன்னும் பண்ணல... ஆனா எனக்கொரு ஆசை... அத நீங்கதான் நிறைவேத்தனும்"ன்னு கேட்டார்.
சனி ஒத்துகிட்ட சந்தோஷத்துல சிவனும் "சொல்லு சொல்லு" நம்ம புள்ள நீ... உனக்கு செய்யாம வேற யாருக்கு செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்.
"உங்க உக்கிர தாண்டவத்த பார்த்து ரொம்ப காலமாச்சு. எனக்காக ஒருதடவை ஆடிக்காட்ட முடியுமா " அப்படினாரு சனி பகவான்.
"அதுக்கென்ன... பேஷா ஆடிடலாம்" ன்னு சிவன் ஆட ஆரம்பிச்சார். சிவன் ஆட ஆட... உடுக்கை தன்னால குலுங்கியது...
உடுக்கை சத்தம் கேட்டதும் பார்வதி. "ஆஹா... இந்த சனிப்பய ஒத்துக்கல போல... எங்கயாச்சும் சிக்காமையா போய்டுவான். அப்போ இருக்கு அவனுக்கு" என்று கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர கூப்பிட்டு நீ உடனே அந்த பில்டிங்க உடைச்சுடு...ன்னு ஆர்டர் போட்டாங்க.
சிவன் திரும்பி வந்து பார்த்தா. பில்டிங் தரைமட்டமா கெடக்கு.
"ஏன் பாரு ... நான் சொன்னதும் தான் சனி ஒத்துகிட்டானே... பின்ன ஏன் இடிச்ச."
"நீங்கதானே சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா இடிக்க சொல்லி.."ன்னா பாரு.
ஆக... சனி நினைச்சுட்டா யார் தடுத்தாலும் அவன் நினைச்சத சாதிச்சுடுவான்.
கதையின் நீதி :
என்னதான் உருண்டாலும் ஒட்டரதுதான் ஒட்டும்.

Your comment will be visible after approval.