வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி ஆகிய நான்கு மாதங்களில் முதல் நாளானது விஷ்ணுபதி புண்ணிய காலம் ஆகும். இந்த நாள் பெருமாளை வழிபட உகந்த நாளாகும்.
அன்றைய தினம் அதிகாலை 1.30 Am மணி முதல் காலை 10.30 Am மணி வரை விஷ்ணுவதி புண்ணிய காலம் வருகிறது
கடுமையான கஷ்டமா?
கொடுமையான வாழ்க்கையா?
பெருத்த மன உளைச்சலா?
பெரும் நஷ்டம், பெரும் கடனா?
குடும்ப உறுப்பினர் இடையே உள்ள பிரச்சனை, குடும்பத்தில் நீண்ட காலமாக தீராமல் இருக்கும் பிரச்சினை
இதையெல்லாம்வற்றிலிருந்தும் விடுபட ஒரு ஆண்டிற்கு நான்கு முறை வரும் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபடுங்கள்.
சங்கு சக்கரம் கையில் வைத்திருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.
அங்குள்ள கொடி மரத்தை நமஸ்காரம் செய்து 27 பூக்களை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், இப்பொழுது பிரகார வலம் வாருங்கள்... (அதாவது கொடி மரத்துடன் சேர்த்து திருக்கோயிலையும் சுற்ற வேண்டும்.)
அப்போது ஒவ்வொரு சுற்றுக்கும் ஒரு பூவை கொடி மரத்தின் முன்பு வையுங்கள்.
சாமிக்கு உகந்த எந்த பூவையும் வைக்கலாம்.
27 சுற்று முடிந்த பிறகு மீண்டும் கொடி மர நமஸ்காரம் செய்யுங்கள்.
பிறகு தாயாரையும் பெருமாளையும் வணங்கி தனது பிரார்த்தனையை மனம் உருகி சொல்லுங்கள்.
தங்களின் நியாயமான கோரிக்கை எதுவானாலும் அது அடுத்த மூன்று விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் கண்டிப்பாக தீர்க்கப்பட்டு விடும்.(நிறைவேறியே தீரும்)
இதை எப்போது செய்ய வேண்டும்? ஏன் இந்த காலத்தில் மட்டும் செய்ய வேண்டும்?
வைகாசி ஆவணி கார்த்திகை மாசி இந்த நான்கு மாதமும் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதங்கள் பிறக்கும் முதல் நாளே விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.
அன்றைய தினம் அதிகாலை 1.30 Am மணி முதல் காலை 10.30 Am மணி வரை விஷ்ணுவதி புண்ணிய காலம் வருகிறது.
அதாவது சரியாக ஒன்பது மணி நேரம் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம் அமைகிறது.
பொதுவாக திதிகளில் சிறந்த திதியான ஏகாதசி திதியே விஷ்ணுவுக்கு உகந்ததாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
இந்த திதியில் ஒருவர் புரியும் பூஜைகளும், அனுஷ்டிக்கும் விரத முறைகளும் அவருக்கு சிறந்த பலனை தருவதாக கூறுவர்.
அப்படிப்பட்ட ஏகாதேசியை விட பன்மடங்கு சிறந்த பலனை தரவல்லது இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம்.
விஷ்ணுவின் அருளும், கருணையும் மிக அதீதமாகவும், பூரணமாகவும் விளங்கும் மிக அரிதான நாளாக விளங்குகிறது இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம்.
இந்த புண்ணிய காலத்தில் மகாவிஷ்ணுவின் மகாலட்சுமியும் மனதார வழிபட்டு நமது எல்லா தேவைகளையும், வேண்டுதல்களையும் கூறி பிரார்த்தனை புரியலாம்.
அதே போன்று அந்த தினத்திலே விரத நாட்களில் செய்யக்கூடாத செயல்களை தவிர்ப்பது நல்லது.
ஒருவர் ஒருமுறை இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தை அனுஷ்டிப்பது என்பது வாழ்க்கையில் பலமுறை ஏகாதேசி விரதத்தை கடைபிடித்தது சமமாக கருதப்படுகிறது என சாஸ்திரம் கூறுகிறது.
இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் அனுஷ்டிப்பதின் மூலம் உலக ஆதாயமாக நமக்கு தேவைப்படும் அனைத்தும் அதாவது மகிழ்ச்சி, செல்வ செழிப்பு, மன நிம்மதி என எல்லா வளமான வாழ்வும் நமக்கு கிடைக்கும் என சாஸ்திரம் கூறுகிறது.
எனவே இந்த அரிதான வாய்ப்பினை தவறவிடாமல் எல்லோரும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தை முழுமையாக கடைபிடித்து லட்சுமி நாராயணனின் பூரண அருளை பெறுவோமாக...!
ஓம் நமோ நாராயணா...
ஸ்ரீ ராம ராம ராமேதி, ரமே ராமே மனோரமே,
சகஸ்ரநாம தத்துல்யம், ராம நாம வரானனே.

Your comment will be visible after approval.