Weekly Horoscope
Table of Content(toc)
நவம்பர் 07, 2021 முதல் நவம்பர் 13, 2021 -ம் தேதி வரையிலான வார ராசிபலன்
நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து இன்ப துன்பங்களுமே நமது ஜாதக கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் உங்கள் கிரக நிலை எப்படி இருக்க போகிறது என்பதை பார்ப்போம். தொழில், வேலை வாய்ப்பு, திருமணம் என அனைத்தை பற்றியும் இங்கே தெரிந்து கொள்ளலாம். சரி, இந்த வாரம், அதாவது நவம்பர் 07, 2021 முதல் நவம்பர் 13, 2021 வரையிலான காலக்கட்டத்திற்கு உங்களது மேஷம் முதல் மீனம் வரையிலான பணிரெண்டு ராசிகளுக்கான துல்லியமாக பலனை பார்ப்போம்.
Aries Weekly Horoscope
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கிறார். இரண்டாம் வீட்டில் ராகு, ஆறாம் வீட்டில் புதன், ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன், எட்டாம் வீட்டில் கேது ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், பத்தாம் வீட்டில் சனியும் குருவும் பயணம் செய்கின்றனர். இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் வார துவக்கத்தில் சாதகமாக இல்லை. சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை. பெரிய அளவில் முதலீடுகள் தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமண சுப காரியம் கை கூடி வரும். சகோதரர்கள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை விசயமாக நல்ல செய்தி தேடி வரும். சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தங்க நகை சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிறைய நன்மைகள் நடைபெறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல செய்தி தேடி வரும். புதிய விசயங்களை நோக்கி பயணம் செய்வீர்கள்.குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் களத்திர ஸ்தானத்தில் உள்ள சூரியன், செவ்வாய், புதன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். குரு பலம் உங்களுக்கு திருமண யோகத்தை தருவார். வரன் பேசி முடிக்க நல்ல நேரம். வீடு, வண்டி வாகனம் வாங்கலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவம்பர் 05,2021 இரவு 09.04 மணி முதல் நவம்பர் 07 இரவு 09.04 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.பயணங்களைத் தவிர்க்கவும் இந்த நாட்களில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.
Taurus Weekly Horoscope
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் ராகு உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன்,ஏழாம் வீட்டில் கேது, எட்டாம் வீட்டில் சுக்கிரன், ஒன்பதாம் வீட்டில் சனி, குரு உடன் இணைந்திருக்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் உஷ்ண கிரகங்கள் இணைந்திருப்பதால் எதிரிகள் தொல்லை ஒழியும் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். எதிர்பார்த்து காத்திருக்கும் நல்ல செய்தி தேடி வரும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன விவாதங்கள் ஏற்படும். சண்டை சச்சரவுகளை தவிர்க்க பொறுமையும் நிதானமும் தேவை. காதலர்களிடையே சண்டைகள் வர வாய்ப்பு உள்ளது விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனங்களை பழுது நீக்கி செலவு செய்வீர்கள். பண வரவு அதிகம் இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் வரும். புதிய முயற்சிகள் வீடு தேடி வரும். குழந்தைகளால் சுப காரியம் நடைபெறும். சொத்து வாங்குவதற்கான நேரம் கை கூடி வரும். உறவினர்களால் உதவிகள் தேடி வரும். புதிய வேலைக்கு முயற்றி செய்யலாம். மன குழப்பம் நீங்கும். பெண்களுக்கு தங்க நகை சேர்க்கை ஏற்படும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். விலை உயர்ந்த நகை, பணத்தை பத்திரமாக வைத்திருங்கள். யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். உணவு விசயங்களில் கவனம் தேவை. உடல் நல பாதிப்புகள் வந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. மாணவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உயர்கல்வி தொடர்பாக முடிவு எடுக்கும் போது பெற்றோர்கள் சொல்வதை கேட்டு நடப்பது நல்லது. நவம்பர் 07 இரவு 09.04 மணி முதல் நவம்பர் 09 இரவு10.37 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
Gemini Weekly Horoscope
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் விரைய ஸ்தானத்தில் ராகு, ஐந்தாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன், ஆறாம் வீட்டில் கேது, ஏழாம் வீட்டில் சுக்கிரன், அஷ்டம ஸ்தானத்தில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. வார இறுதியில் சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் அவசியம் தேவை. தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். வரவே வராது என்று நினைத்த பணம் வீடு தேடி வரும். நிதி நெருக்கடிகள் நீங்கும். நினைத்த காரியம் நிறைவேறும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சொந்த பிசினஸ் லாபகரமாக இருக்கும். மன நிம்மதியும் தன வருமானமும் வரும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். திருமணம் சுபகாரியம் தொடர்பாக பேசலாம். பெண்களுக்கு இது வெற்றிகரமான மாதம் நிறைய நல்ல விசயங்கள் நடைபெறும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் உயர்கல்வி யோகத்தையும் தரும். தேர்வு பயணம் நீங்கும். நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. புதிய உற்சாகம் பிறக்கும். வேலைப்பளு நீங்கி சுறுசுறுப்பு கூடும். சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். மனக்கவலை நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு நன்மைகள் நடைபெறும். உறவினர்களால் உற்சாகம் அதிகரிக்கும். கடன் பிரச்சினை நீங்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். நவம்பர் 09 இரவு10.37 மணி முதல் நவம்பர் 12 அதிகாலை 02.51 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. ு
Cancer Weekly Horoscope
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், ஐந்தாம் வீட்டில் கேது, ஆறாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் குரு உடன் சனி இணைந்திருக்கிறார். லாப ஸ்தானத்தில் ராகு பயணம் செய்கிறார்.வேலையில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும், புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில் ஸ்தான அதிபதியின் பார்வை பத்தாம் வீட்டில் விழுவதால் புரமோசனும் நல்ல சம்பளமும் கிடைக்கும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். இருக்கிற வேலையில் கவனம் தேவை. குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் கை கூடி வரும். யோகங்கள் நிறைந்த மாதம். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வீடு வாகனம் வாங்கலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். பண வரவு தாராளமாக இருக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களிடம் இருந்து வீட்டிற்கு பணம் வரும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.
Leo Weekly Horoscope
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், நான்காம் வீட்டில் கேது, ஐந்தாம் வீட்டில் புதன், ஆறாம் வீட்டில் சனி, குரு, பத்தாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. இந்த வாரம் வேலையில் மாற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வீடு தேடி வரும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கும். சுப கிரகங்கள் சாதகமாக உள்ளன. குடும்பம் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தோடு இணைந்து சுற்றுலா செல்வீர்கள். உங்களுக்கு பணவரவு அபரிமிதமாக இருக்கும்.தொழில் முயற்சியில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும் பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும். அப்பாவிற்கு உத்யோக உயர்வு கிடைக்கும். இடமாற்றங்கள் நல்ல முறையில் நடைபெறும். பூர்வீக சொத்து மூலம் லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் நன்மைகள் நடைபெறும். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். பண வரவு திருப்தி தரும். குடும்பத்தில் சுப காரியம் கை கூடி வரும்.
Virgo Weekly Horoscope
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன், மூன்றாம் வீட்டில் கேது, நான்காம் வீட்டில் சுக்கிரன், ஐந்தாம் வீட்டில் சனி,குரு, ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. வாக்கு ஸ்தானத்தில் உஷ்ண கிரகங்கள் இணைந்திருப்பதால் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் திருமணம் வரன் பேசுவதில் சில தடைகள் ஏற்படும். முயற்சி செய்வதை தள்ளிப்போடுவது நல்லது. காதல் வாழ்க்கையில் சில சிக்கல்கள் வரலாம் சண்டை வந்தாலும் சமாதானமாக செல்வது அவசியம். பெண்களுக்கு இல்லத்தரசிகளுக்கு செலவுகள் அதிகரிக்கும். வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலைப்பளுவும் கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். பெரிய அளவில் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவைப்படும் தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புரமோசன் கிடைக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார வளர்ச்சி நன்றாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும். பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். கடன் பிரச்சினைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.புதன்கிழமை பெருமாளை வணங்க நன்மைகள் ஏற்படும்.
Libra Weekly Horoscope
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுக்கு சாதகமான வாரம். ராசிக்குள் சூரியன், செவ்வாய்,புதன், இரண்டாம் வீட்டில் கேது, மூன்றாம் வீட்டில் சுக்கிரன், நான்காம் வீட்டில் சனி, குரு, எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உடன் பிறந்தவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். காதல் திருமண வாழ்க்கையில் சிலமாற்றங்கள் ஏற்படலாம். ஒரு வார்த்தை வெல்லும் ஒரு வார்த்தை கொல்லும் கவனமும் நிதானமும் தேவைப்படும். பதற்றத்தை தவிர்க்கவும். கணவன் மனைவி உறவில் நெருக்கம் கூடும். வேலையில் சில பிரச்சினைகள் வந்து நீங்கும் உயரதிகாரிகளிடம் கவனமாக பேசவும். வேலை செய்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். சரக்குகள் விற்று தீரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த வம்பு வழக்குகள் நீங்கும். புதிதாக வாகனங்கள் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். பெண்களுக்கு நன்மைகள் நிறைந்த வாரமாகும். வீட்டிலும் வெளியிடங்களிலும் மதிப்பு மரியாதை கூடும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனமும் அக்கறையும் காட்டுவது அவசியம். எதிர்காலம் பற்றி முடிவுகளை எடுக்கும் போது நிதானமும் கவனமும் அவசியம். உடல் நலத்தில் திடீர் பாதிப்புகள் வரலாம் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். சிவ ஆலயம் சென்று வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
Scorpio Weekly Horoscope
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு சூரியன் 12ஆம் வீட்டில் செவ்வாய், புதன் உடன் இணைந்துள்ளார். ராசியில் கேது, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சனி, குரு, ஏழாம் வீட்டில் ராகு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. விரைய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் பயணம் செய்வதால் உஷ்ணம் தொடர்பான நோய் ஏற்படும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும். குடும்பத்தோடு குதூகலமாக இருப்பீர்கள். சுக்கிரன் இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் திடீர் பண வரவு வரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் பிறக்கும். திருமணமானவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தனியார் துறை, வங்கித்துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். ராசியில் ஞானகாரகன் கேது சஞ்சரிப்பது மிக சிறப்பான யோகம். உங்க வாக்கிற்கு மதிப்பு கூடும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக சுற்றுலா செல்ல வேண்டியிருக்கும்.
Sagittarius Weekly Horoscope
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுடைய ராசியில் சுக்கிரன், விரைய ஸ்தானத்தில் கேது,இரண்டாம் வீட்டில் சனி,குரு, ஆறாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் உள்ள புதன் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் உடன் இணைவது சிறப்பு. . வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். புதிய வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த சிக்கல்கள் நீங்கும். வெளிநாடு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். குடும்பத்துடன் மகிழ்ச்சியோடு நேரத்தை செலவு செய்வீர்கள். சூரியன், செவ்வாய் பார்வை உங்கள் ராசிக்கு ஐந்தாவது வீட்டின் மீது விழுவதால் பிள்ளைகளால் சுப செலவுகள் வரும். இரண்டாவது வீட்டில் குரு, சனியால் பண வரவு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு சிறப்பான வாரம். உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். பெண்களுக்கு நன்மைகள் அதிகரிக்கும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
Capricorn Weekly Horoscope
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்கள் ராசியில் சனி,குரு, ஐந்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டில் சூரியன்,செவ்வாய்,புதன், லாப ஸ்தானத்தில் கேது விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. பத்தில் சூரியன் பதவியைத் தருவார். பத்தாம் வீட்டில் சூரியன் நீசம் பெற்றிருந்தாலும் கூடவே இணைந்திருக்கும் செவ்வாய்,புதனாலும் சனிபகவானின் பார்வை கிடைப்பதால் யோகங்கள் அதிகமாகும். வேலையில் புரமோசன் வரும். அலுவலகத்தில் உங்களின் வேலைக்கு அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் வேலைகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டும். சிறிதளவு கவன தடுமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது மாணவர்கள் படிப்பில் கவனத்தோடு இருப்பது அவசியம். புத்திசாலித்தனமாக அணுகுங்கள். மன குழப்பத்தை தவிருங்கள். குருவின் பார்வை உங்களின் மன குழப்பத்தை தவிருங்கள். படிப்பில் கவனமும் நிதானமும் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் வரும். சம்பளம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். புரமோசனுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும். பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும் வாரம். சனிக்கிழமை சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கலாம் நன்மைகள் நடைபெறும்.ை
Aquarius Weekly Horoscope
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் புதன், ஒன்பதாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன், பத்தாம் வீட்டில் கேது லாப ஸ்தானத்தில் வீட்டில் சுக்கிரன், ராசியில் சனி, குரு என கிரகங்கள் பயணம் செய்கின்றன. அபரிமிதமான பணவரவு உண்டு. வெளிநாடு போகும் அமைப்பு வரும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் உதவிகள் தேடி வரும். அவர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கையில் உற்சாகம் கூடும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். அப்பாவின் வழி உதவிகள் கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள்,பிதுர் ராஜ்ஜித சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கை கூடி வரும். பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவை. பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் பிரச்சினைகள் வம்பு வழக்கு வந்து நீங்கும். வாகன பழுதுகள் நீங்கும்.
Pisces Weekly Horoscope
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்
இந்த வாரம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சூரியன், செவ்வாய்,புதன், ஒன்பதாம் வீட்டில் கேது, பத்தாம் வீட்டில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சனி,குரு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. திடீர் மன அழுத்தம் வரும். அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய்,புதன் இணைந்துள்ளதால் வாகனங்களில் நிதானம் அவசியம். கூர்மையான பொருட்களை கையாளும் போது கவனம் தேவை. கணவன் மனைவி உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். இருக்கும் வேலையில் கவனம் தேவை. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் தேடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அந்நியோன்னியம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். பண வரவு திருப்தி தரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். நவம்பர் 05ஆம் தேதி இரவு 09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. இந்த நாட்களில் பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகளைத் தவிர்க்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப்போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் பணம் கடனாகக் தர வேண்டாம். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை.


Your comment will be visible after approval.