Table(toc)
திருப்பதி சென்று வந்தால் திருப்பம்
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என பெரியோர் கூறுவதுண்டு. தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வரும் திருப்பதி தேவஸ்தாலம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிய, எம்பெருமானின் அளிக்கொடுக்கும் அருள் தான் காரணம்.
- திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்
அப்படிப் பட்ட திருப்பதி ஆலையத்தில் உள்ள பெருமாளின் சிலை எப்போதும் 110 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கின்றதாம்.
3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருமலை திருப்பதி கோயில். பொதுவாக உயரத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பது வழக்கம்.
ஆனால் பெருமாள் சிலை இவ்வளவு வெப்பநிலையுடன் இருப்பது அதிசயமாக பார்க்கபடுகின்றது.
- அபிஷேகம்
பெருமாளுக்கு தினமும் காலை 4.30 மணிக்க் குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அபிஷேகம் முடிந்த உடன் பெருமாளுக்கு வேர்க்கின்றதாம். அதானல் பெருமாலை பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.
- ஆபரணங்கள்
ஏழுமலையானின் சாலக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை ஆகும். சூரியகடாரி 5கிலோ ஆகும். இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கக்ள் தேவை.
அபிஷேகத்தின் பொது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்களை திறந்திருப்பதாக ஐதீகம்.
வியாழக் கிழமை ஒருமுறை பெருமாள் நகைகளை கலைந்து துளசி மாலையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
அப்படி பெருமாளின் உடலிலிருந்து ஆபரணங்கள் எடுக்கும் போது ஆபரணங்கள் சூடாக கொதிக்கின்றன.
- திருப்பதியில் காணப்படும் ஓவியங்கள்
திருப்பதியில் காணப்படும் ஓவியங்கள் முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இத்திருக்கோவிலில் பல மன்னர்களால் காணிக்கை வழங்கப்பட்டன.
- பச்சை கற்பூரம்
ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு பச்சை கற்பூரம் சாதிக்கின்றனர். இந்த பச்சை கற்பூரம் ஒரு ரசாயனம் இது அரிப்பை கொடுக்கும் ரசாயனமாகும்.இந்த ரசாயனத்தை சாதாரண கருங்கல்லில் தடவினால் அந்த கல்லானது வெடித்துவிடும்.ஏழுமலையான் திருஉருவ சிலைக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் தடவுகின்றன ஆனாலும் இந்த சிலையில் எந்த ஒரு வெடிப்பும் இதுவரை வந்ததில்லை.
- கருங்கல் சிலை
எந்த கருங்கல் சிலை ஆனாலும் எங்காவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும் அடையாளம் தெரியும் அல்லது உலோகசிலையானாலும் அதை வடிவமைத்த அடையாளம் தெரியும்.ஆனால் இந்த சிலையில் எந்த ஒரு அடையாளமும் இதுவரை தெரிந்ததில்லை.எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும் ஆனால் இச்சிலையில் வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போட்டதுபோல இருக்கின்றன.
- காலையில் சிறப்பு அபிஷேகம்
இக்கோவிலில் வழக்கமாக நடைப்பெறும்.அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்சம் ருபாய் செலவிடப்படுகிறது. ஐரோப்பாவில் உள்ள பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் விமானம் மூலமாக அனுப்பிவைக்கப்பசுகின்றன. மற்றும் ஏழுமலையான் அணிந்திருக்கு நகையின் மதிப்பு சுமார் ஆயிரம் கோடியாகும். இவருக்கு நகைகளை வைத்துக்கொள்ள இடமும் இல்லை சாத்த நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒருமுறை அவரின் நகைகளை விளம்பரப்படுத்தி ஏலம் விடப்படுகின்றன.
ஏழுமலையான் திருஉருவ சிலையில் எந்த ஒரு ஆயுதமும் இருக்காது.அவர் நிராயுதபாணி அதனால் தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால் வெறுங்கை வேந்தன் என அழைக்கப்பட்டார்.
- சிலாதோரணம்
திருமலையில் திருப்பதி ஆலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள ‘சிலாதோரணம்’ என்ற பாறை உள்ளது இது சுமார் 250 கோடி வருடங்கள் பழமையானது என கூறப்படுகிறது. இரு பெரிய பாறைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது.
- ஏழுமலையானின் கரங்கள்
ஏழுமலையானின் கரங்களை பாருங்கள். அப்படியே முருகன் சிலையில் இருக்கும் கரங்களின் வடிவத்தையே பெற்றுள்ளது.
சங்கும் சக்கரமும் தனியாக ஒட்டப்பட்டுள்ளதாகவும், இரு கரங்கள் போலியாக இணைக்கப்பட்டுள்ளது என்றும் மற்றோரு தரப்பினரால் கூறப்படுகிறது.



Your comment will be visible after approval.