Table(toc)
திருப்பதியின் உண்மை வரலாறு
திருப்பதி இந்தியாவில் உள்ள ஆந்திரப் பிரதேசத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள சித்தூர் மாவட்டத்தில்அமைந்துள்ள ஒரு வைணவத் தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் ஒன்றாகும்.
- சொல் இலக்கணம்
திருப்பதி என்ற சொல் திரு+பதி என்று பிரிக்கப்படுகிறது. வடமொழி சொல்லான பதி என்பதற்கு கணவன் (தலைவன்) என்று பொருளுண்டு, தமிழ் சொல்லான திரு என்பதற்கு புண்ணியம், தெய்வத்தன்மைவாய்ந்த, மேன்மைமிக்க என பல பொருள்கள் உண்டு. திருப்படி என்பதே மருவி திருப்பதி ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.
- வரலாறு
உலகிலேயே பழைமையும், பெருமையும் வாய்ந்த பாறை மலைகளில் இரண்டாம் இடம் வகிக்கும் மலைகள் இந்த திருமலை மலைகள் தான். திருப்பதியின் பழைய பெயரான திருவேங்கடத்தை கி.மு.400-100 இல் எழுதப்பட்ட தமிழ் சங்க இலக்கியங்களான சிலப்பதிகாரமும், சாத்தனாரின் மணிமேகலையும்குறிப்பிட்டுள்ளன.
- பிரமோசவம்
திருப்பதி பிரம்மோற்சவம் புகழ் பெற்ற கோவில் திருவிழாவாகும். பங்குனி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி கணக்கில் கொண்டு இந்த திருவிழா நடத்தப்படுகிறது. சில தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பும் செய்கின்றன. திருமலைக் கோவிலில் தினமும் அதிகாலையில் 'ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம்' (திருப்பள்ளி எழுச்சி) ஒலிக்கிறது.
- திருப்பதி லட்டு
இங்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு உலகப் புகழ் பெற்றதாகும். இந்த பிரசாதமானது திருப்பதி திருமலை தேவஸ்தானத்தினரைத் தவிர வேறெவரும் தயாரித்து விற்கக்கூடாது என்பதற்கான புவிசார் குறியீடுகாப்புரிமையை பெற்றதாகும். இந்த லட்டுக்கள் சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம் போன்ற மூல பொருட்களால் தயாரிக்கப்படுகிறது.
- பயணம்
தென்னிந்தியா முழுவதும் செல்ல மற்றும் அருகில் இருக்கும் ஊர்களுக்கும் பெரிய நகரங்களுக்கும் செல்ல திருப்பதியில் பேருந்து வசதி இருக்கின்றது. தனியார் நிறுவனத்தினர் சென்னை,மதுரை,கோயம்புத்தூர், திருப்பூர் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் பேருந்துகளை விடுகின்றனர்.
- ஸ்ரீ வெங்கடேசுவரா உயிரியல் பூங்கா
ஆந்திரா பிரதேசத்தின் இரண்டாவது உயிரியல் பூங்காவாகும். இதில் ஏராளமான விலங்குகள் செடிகொடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த பூங்காவில் கிட்டத்தட்ட 10 இலிருந்து 15 வரை புலிகள் உள்ளன.
- திருவிழாக்கள்
வைகுண்ட ஏகாதசி, ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாத பிரம்மோற்சவம், மார்கழி உற்சவம் மிகவும் முக்கியமாக விழாவாகக் கருதப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு வாரத்துக்குள் இலட்சக்கணக்கில் பக்தர்கள் குவிகின்றனர். ரத சப்தமி(மகா சுத்த சப்தமி) என்ற திருவிழா இங்கு நடைபெறுகிறது.
- திருப்பதி பெருமாள் சிலையின் அதிசயம்
அப்படிப் பட்ட திருப்பதி ஆலையத்தில் உள்ள பெருமாளின் சிலை எப்போதும் 110 ஃபாரன்ஹீட் வெப்பத்தில் இருக்கின்றதாம்.
3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது திருமலை திருப்பதி கோயில். பொதுவாக உயரத்தில் வெப்பநிலை குறைவாக இருப்பது வழக்கம்.
ஆனால் பெருமாள் சிலை இவ்வளவு வெப்பநிலையுடன் இருப்பது அதிசயமாக பார்க்கபடுகின்றது.
பெருமாளுக்கு தினமும் காலை 4.30 மணிக்க் குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இருப்பினும் அபிஷேகம் முடிந்த உடன் பெருமாளுக்கு வேர்க்கின்றதாம். அதானல் பெருமாலை பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள்.
வியாழக் கிழமை ஒருமுறை பெருமாள் நகைகளை கலைந்து துளசி மாலையுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார்.
அப்படி பெருமாளின் உடலிலிருந்து ஆபரணங்கள் எடுக்கும் போது ஆபரணங்கள் சூடாக கொதிக்கின்றன.
- சிலாதோரணம்
திருமலையில் திருப்பதி ஆலையத்திலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ள ‘சிலாதோரணம்’ என்ற பாறை உள்ளது இது சுமார் 250 கோடி வருடங்கள் பழமையானது என கூறப்படுகிறது. இரு பெரிய பாறைகள் முத்தமிட்டுக் கொள்வது போன்ற தோற்றம் கொண்டதாக உள்ளது.


Your comment will be visible after approval.