
தேவையான பொருட்கள் :
- நன்கு பழுத்த நாட்டுத் தக்காளி - ஒரு கிலோ,
- பூண்டு - 100 கிராம்,
- காய்ந்த மிளகாய் - 15,
- மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,
- துருவிய வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன்,
- நல்லெண்ணெய் - 150 கிராம்,
- கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
- வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
- பெருங்காயத்தூள் - ஒரு டீஸ்பூன்,
- கல் உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை :
* தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
* வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மிளகாய், வெந்தயம், கடுகை தனித்தனியாக போட்டு வறுத்து அரைத்து கொள்ளவும்.
* அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து 100 கிராம் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டை முழுதாக போட்டு வதக்கவும்.
* பூண்டு நன்றாக வதங்கியதும் நறுக்கிய தக்காளியையும் சேர்த்து (தண்ணீர் சேர்க்காமல்) வதக்கவும்.
* தக்காளிக்கு தேவையான அளவு தூள் உப்பு சேர்க்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி வரும் போது மஞ்சள்தூள், வெல்லம் சேர்க்கவும்.
* தக்காளி நன்றாக வதங்கி எல்லாம் சேர்ந்து சுருண்டு வரும்போது வறுத்து அரைத்த பொடியைத் தூவி, பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
* இரண்டு கொதி வந்ததும் மீதியுள்ள 50 கிராம் நல்லெண்ணெயை ஊற்றிக் கிளறி இறக்கவும்.
* எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து ஆறியவுடன் காற்று புகாத டப்பாவில் போட்டு மூடி வைக்கவும்.
* இப்போது சுவையான தக்காளி ஊறுகாய் ரெடி.

Your comment will be visible after approval.