
Table(toc)
இலட்சுமி (Lakshmi) என்பவர் இந்து சமயத்தில் வணங்கப்படும் பெண் கடவுளாவார். இவர் செல்வத்தை வழங்கும் கடவுளாகவும் விஷ்ணுவின் துணைவியாகவும் சித்தரிக்கப்படுகிறார். விஷ்ணுவின் அவதாரங்களின் துணையாக இவரும் சீதை, உருக்மணி, பத்மாவதி போன்று அவதாரம் எடுப்பதாக கூறுவதுண்டு.
மகாலட்சுமி தோன்றிய வரலாறு
மகிசாசூரனை வதம் செய்ய மூன்று தேவியர்களும் இணைந்து துர்க்கையாக மாறி ஒன்பது நாட்கள் கடும் தவம் செய்த காலத்தை தான் நவராத்திரி என கூறப்படுகின்றது.
மலை மகள் எனப்படும் பார்வதி தேவி, அலை மகள் எனும் மகா லட்சுமி, கலை மகள் எனும் சரஸ்வதி தேவி ஆகிய மூவரும் சேர்ந்த உருவம் தான் துர்க்கை அம்மன்.
நவராத்திரியின் 4,5,6 ஆகிய நாட்கள் மகா லட்சுமியை வழிபடப்படுகிறது.
இந்த மகாலட்சுமி தோன்றிய புராணக் கதையை
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும், மனிதர்களைப் போல நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவை இருக்கின்றன. இதிலிருந்து தேவர்கள் விடுபட வேண்டும் என நினைத்தார்கள்.
தேவர்களின் தலைவராகிய இந்திரன் அதிலிருந்து விடுபட வேண்டி பிரம்மனிடம் முறையிட்டனர். ஆனால் அவரோ நானும் திரை எனும் இரண்டாவது கட்டத்திற்கு வந்துவிட்டேன் என நினைக்கின்றேன். அதனால் மகா விஷ்ணுவிடம் முறையிட்டால் அதற்கு தீர்வு கிடைக்கும் என தெரிவித்தார்.
பாற்கடல் கடைதல்
மகா விஷ்ணுவிடம் முறையிட்ட போது, கவலைப் பட வேண்டாம். இந்த பாற்கடலில் அமிர்தம் இருக்கின்றது. நாம் இந்த பாற்கடைலை கடைந்தால் அதைப் பெற முடியும் என்றார்.
அந்த அமிர்தத்தை அருந்தினால் நாம் நரை, திரை, மூப்பு, சாக்காடு ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும்.
இதையடுத்து ஆலோசனை நடந்தது. தேவர்கள் மட்டும் பாற்கடலைக் கடைவது இயலாதது. அதனால் அசுரர்களின் உதவியை நாட வேண்டும் என விஷ்ணு தெரிவித்தார்.
இந்த பாற்கடலை கடைந்து அமிர்தத்தை எடுக்க மேருகிரி மலையை மத்தாகவும், வாசுகி பாம்பு கயிறாகவும் வைத்து கடைந்தனர்.
மகாலட்சுமி தோன்றுதல்
ஆயிரம் ஆண்டுகள் பாற்கடலை கடைந்தனர். அப்போது கயிறாக இருந்த வாசுகி நாகம் வலி தாங்க முடியாமல் விஷத்தைக் கக்கியது.
அப்படி கடலில் திரண்டு வந்த ஆல ஹால விஷத்தை சிவ பெருமான் அருந்தி, அதை தன் கழுத்தில் நிறுத்தினார், விஷத்தால் நீலகண்டரானார்.
கடைசியாக அந்த கடலிலிருந்து அமிர்தம் வெளிவருவதற்கு முன், பல்வேறு பொருட்கள் வெளி வந்தன.
சிந்தாமணி, சூடாமணி, கௌத்துவ மணி, மூதேவி, ஸ்ரீதேவி, அகலிகை, காமதேனு, கற்பக மரம், துளசி ஆகியவை தோன்றியது.
பாற்கடலைக் கடைந்தவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பொருளை எடுத்துக் கொள்கின்றனர்.
அப்படி அதிலிருந்து வெளியே வந்த ஸ்ரீதேவியான மகா லட்சுமியை மகா லட்சுமியை ஆட்கொண்டு அவரை மணம் புரிந்து, மகா லட்சுமி சமேத மகா விஷ்ணுவாக அருள்பாலிக்கின்றார்.
கௌத்துவ மணியை தான் திருமாள் தனது மார்பில் அணிந்திருக்கின்றார். இப்படி அலை கடலிலிருந்து தோன்றியதால், மகா லட்சுமிக்கு அலை மகள் என பெயர் வந்தது.
லட்சுமி தேவி வரலாறு
ஒருசமயம் லட்சுமிதேவி எந்த வீட்டில் வாசம் செய்யலாம் என்று பார்க்க வந்தாள்.
ஒரு வீட்டில் விடிந்த பின்பும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
இன்னொரு வீட்டில் மாடும், கன்றும் இருந்தாலும் ஒரே தூசியும், குப்பையுமாக இருந்தது.
மூன்றாவது வீட்டில் ஒரே சண்டை. மனைவி தலையை விரித்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான்காவது வீட்டில் வாசலில் கோலம் போட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து அந்த இல்லத்தரசி ஸ்லோகங்களாக சொல்லிக் கொண்டு இருந்தாள்.
வாசலில் நின்ற வரலட்சுமியை பார்த்து பழுத்த சுமங்கலியாக வந்திருப்பவளைக் கண்டு மகிழ்ந்து உள்ளே அழைத்தாள். மனையை போட்டு அமர வைத்து விட்டு உள்ளே போய் பால் எடுத்துக்கொண்டு வெளியே வந்தால் அந்த சுமங்கலி இல்லை. பூஜை அறையில் செல்வம் மட்டும் குவிந்து கிடந்தது. அதாவது லட்சுமிதேவி எங்கும், எப்பொழுது வேண்டுமானாலும் வருவாள்.
லட்சுமி தேவி வசிய மந்திரம்
நம் அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காரணம் தெரியாமல் வேதனைகளும் பல துன்பங்களும் நம் வாழ்க்கையில் தினம் நடைபெறுகின்ற ஒரு செயலாகவே இருக்கிறது, செல்வங்கள் இருந்தும் செல்வம் இல்லாத தோற்றம் ஒவ்வொரு மனிதனுக்கும் அன்றாட வாழ்க்கையில் நடக்கின்ற ஒரு பரிதாபகரமான ஒரு நிகழ்வு.
அதற்க்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லட்சுமி தேவி வசிய மந்திரத்தை முறையாக தீட்சை எடுத்து தியானம் செய்தால் கண்டிப்ப்பாக பலன் கிடைக்கும்.
"ஓம் ஸ்ரீ லக்ஷ்மிதேவி வசி வசி சுவாகா " (alert-success)
எப்படி உச்சரிப்பது எத்தனை நாள் என்பது உங்கள் மன நிலையை பொறுத்து குறைந்தது 48 நாள் முதல் 97 நாட்களுக்குள் உங்களுக்கு லக்ஷ்மிதேவி வசியமாகி விடுவாள்.
கர்வத்தால் அழகை இழந்த மகாலட்சுமி
வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவும், மகாலட்சுமியும் வீற்றிருந்தனர். அவர்கள் பூலோக மக்கள் பற்றியும், அவர்களின் இன்ப– துன்பங்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்களின் பேச்சு அழகு பக்கம் திசைமாறியது.
அப்போது மகாலட்சுமி, ‘நான் அழகாக இருக்கிறேன். அதனால்தான் பூலோகத்தில் இருப்பவர்கள், நான் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டும் என்றும், அந்த வீட்டில் நான் நிரந்தரமாகத் தங்க வேண்டும் என்றும் வேண்டுகின்றனர்’ என்று தன் அழகைப் பற்றிப் பெருமையாகப் பேசினார்.
அதைக் கேட்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர் களுக்கு அகத்தில் இருப்பதுதான் அழகு, புறத்தில் இருப்பது மாயையில் சுழல வைப்பது என்று தெரிவதில்லை. பூலோகத்தில் இருக்கும் மனிதர்களில் பலரும் பணம் ஒன்றுதான் வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பணமில்லாதவர்கள் பூலோகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்பது போல் ஒரு மாயத் தோற்றம் அவர்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. பணம் ஒரு மாயை என்பதை உணராமல், அதை அதிகமாகச் சேர்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக் கிறார்கள்’ என்றார்.
‘இறைவா! பூலோகத்தில் இருப்பவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, பணமே முதல் தேவையாக இருக்கும் போது, அதை எப்படி மாயை என்று சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார் மகாலட்சுமி.
அதற்கு பதிலளித்த மகாவிஷ்ணு, ‘பூலோகத்தில் இருப்பவர்கள் பணம் என்ற மாயையில் சிக்கிக் கொண்டு அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை முதலில் தேடத் தொடங்கியவர்கள், பணமே வாழ்க்கை என்று மாறிப் போய்விட்டார்கள். தங்கள் தேவைக்குப் பணத்தைத் தேடிக் கொண்டிருந்தவர்கள், தற்போது தன் பிற்கால சந்ததியினருக்கும் சேர்க்க வேண்டும் என்று கருதி, தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாயை என்று சொல்லாமல், வேறு எப்படிச் சொல்ல முடியும்?’ என்றார்.
‘சுவாமி! என்னுடைய அழகையும், பூலோகத்தில் எனக்குக் கிடைக்கும் மதிப்பையும் பாராட்ட மனமில்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். கருமையாக இருக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு அழகைப்பற்றி என்ன தெரியும்? என்னைப் போன்று அழகாக இருப்பவர்களைக் குறை சொல்ல மட்டுமே தெரியும்’ என்று விஷ்ணுவின் கருமை நிறத்தைச் சுட்டிக் காட்டி பேசினார் மகாலட்சுமி.
சாபம்
தன் நிறத்தைப் பற்றி பேசியும் மகாவிஷ்ணு கோபம் கொள்ளாமல், ‘தேவி! பூலோகத்தில் இருப்பவர்கள், பெண்களுக்கு முகத்தை வைத்தும், ஆண்களுக்கு உடலமைப்பை வைத்தும் அழகைத் தவறாக மதிப்பிட்டு வருகின்றனர். பொலிவான முகம், பெரிய கண்கள், மெலிதான புருவங்கள், சிறிய மூக்கு, சிவந்த உதடுகள் போன்ற முக அமைப்புடைய பெண்கள்தான் உடல்நலத்துடன், அதிகமான குழந்தைகளை அளிப்பார்கள் என்கிற எண்ணத்தில் ஆண்கள் அவர்களை விரும்பினார்கள். காலப்போக்கில் இந்த விருப்பமே பெண்களின் அழகு என்றாகி விட்டது.
இதேபோல் பெண்கள், தங்களுக்குக் கணவனாக வருபவன் உடல் பலத்துடன் இருந்தால்தான் காட்டிற்குச் சென்று, வேட்டையாடித் தங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்று நினைத்தனர். இதனால், ஆண்களுக்கு உடல் பலமே அழகு என்றாகி விட்டது.
ஆனால் உண்மையில், பிறருக்குத் தீங்கிழைக்காத நல்ல மனமும், தம்மைத் தேடி வருபவர்களுக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணமும்தான் உண்மையான அழகு என்பதை அனைவரும் மறந்து போய்விட்டனர்’ என்றார்.
மகாலட்சுமியோ, ‘இறைவா! மகாலட்சுமி என்ற எனது பெயருக்குப் பேரழகு என்று பொருள் என்று உங்களுக்குத் தெரியும். இருப்பினும் அழகு, செல்வம், மகிழ்ச்சி, அன்பு, கருணை, அமைதி என்று அனைத்துச் செல்வங்களின் தேவதையாக இருக்கும் என்னைப் பற்றிக் குறை சொல்கிறீர்கள். அழகு வெளிப்படும் இடங்களிலெல்லாம் திருமகளாக நான் இருக்கிறேன் என்பதைத் தாங்கள் அறிந்திருந்தும், என்னை அவமதிக்கும் நோக்கத்திலேயே பேசுகிறீர்கள். செல்வத்துடன் சேர்ந்திருக்கும் என்னுடைய அழகிற்கு, நீங்கள் சொல்லும் எந்த அழகும் இணையானதில்லை’ என்றார் கோபத்துடன்.
இதைக் கேட்டு கோபமடைந்த மகாவிஷ்ணு, ‘ஒரு பெண்ணுக்கு உடல் அழகு தேவையாக இருக்கலாம், ஆனால் அந்த அழகு மீது கர்வம் கொண்டு, உண்மையான அழகினை மறந்துவிடக் கூடாது. எந்த உடல் அழகு மீது நீ அளவு கடந்த பற்று கொண்டு, என்னை எதிர்த்துப் பேசினாயோ, அந்த அழகு கொண்ட உடல் இல்லாமல், உருவமில்லாதவளாகப் (அரூபம்) போவாய்’ என்று மகாலட்சுமிக்கு சாபம் கொடுத்தார்.
சாபம் கொடுத்த பிறகுதான் மகாலட்சுமிக்கு சுய உணர்வே வந்தது. ‘இறைவா! என் தவறை மன்னித்து எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.
அவர் மீது இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு, ‘தேவி! பூமியில் ஒரு முறை செய்யும் தவத்திற்கு, ஒரு கோடி முறை தவம் செய்த பலன் எங்கு கிடைக்குமோ, அங்கு சென்று என்னை நோக்கித் தவம் செய்தால் உனது சாபத்திற்கு விமோசனம் கிடைக்கும்’ என்றார்.
விமோசனம்
உருவம் இல்லாதவளாகப் பூலோகம் வந்து சேர்ந்தார் மகாலட்சுமி. சிவனின் கண்களை மூடியதால் சாபம் பெற்ற பார்வதி தேவி, அந்த சாபத்தில் இருந்து மீள ஏகாம்பரேஸ்வரரை வணங்கிய இடமே, தனக்கும் சாப விமோசனமளிக்கும் இடமாக இருக்கும் என்று எண்ணினார். எனவே அந்த இடத்திற்கு வந்த மகாலட்சுமி, விஷ்ணுவை நினைத்து தவம் இயற்றத் தொடங்கினார்.
அவருடைய தவத்தின் பயனாக, ஒவ்வொரு நாளும் மகாலட்சுமியின் உருவம் சிறிது சிறிதாகக் கண்களுக்குத் தெரியத் தொடங்கியது. தொடர் வேண்டுதலில், அவரது உருவம் முழுமையாக பிறர் கண்ணுக்குத் தெரியத் தொடங்கியது. தவத்தின் வலிமையால் முன்பு இருந்ததை விட அதிகமான அழகு சேர்ந்து ஒளி வீசத் தொடங்கியது.
தன்னை விட்டுப் பிரிந்து சென்ற மகாலட்சுமியை, வைகுண்டம் அழைத்து வருவதற்கு சரியான நாளை எதிர்பார்த்திருந்தார் விஷ்ணு. இந்த நிலையில் விஷ்ணு வரத் தாமதமானதால், மகாலட்சுமிக்கு கவலை அதிகரித்தது.
இந்நிலையில் ஒருநாள், அந்த இடத்திலிருக்கும் பஞ்சதீர்த்தக் கரையில் பார்வதி தேவியை மகாலட்சுமி சந்தித்தார். அவரிடம், தனக்கு முழு உருவம் கிடைத்தும், விஷ்ணு தன்னை அழைத்துச் செல்லாதது பற்றி வருத்தப்பட்டார்.
அப்போது விஷ்ணு, மகாலட்சுமி முன்பை விட எவ்வளவு அழகாக இருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில், மறைவான ஒரு இடத்தில் இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த பார்வதிதேவி, அவரைக் ‘கள்வன்’ என்று அழைத்தார்.
பார்வதி கள்வனென்று யாரைச் சொல்கிறார் என்று மகாலட்சுமியும் திரும்பிப் பார்த்தார். அங்கு மகாவிஷ்ணு நின்று கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கப்பட்டுத் தலை குனிந்தார்.
மறைவில் இருந்து வெளியே வந்த விஷ்ணு, ‘தேவி! இந்தப் பூமியில் உன் அழகைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஹரிணி (பசுமையான உடல் அழகைப் பெற்றவள்), சூர்யா (கதிரவனுக்கு நிகரான ஒளியுடையவள்), ஹிரண்மயி (பொன்னிறமானவள்), ஹிரண்ச வர்ணா (பொன்னிற உடலுடையவள்), சந்திரா (நிலவுக்கு நிகரான முகமுடையாள்), ஆர்த்திரா (நீரில் தோன்றியவள்), பத்ம ஸ்திதா (தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள்), பத்ம வர்ணா (தாமரை நிறமுடையவள்), ஆதித்ய வர்ணா (சூரியகாந்தி தோற்றமுடையவள்), கரிஷிணி (பெருகும் பசுச் செல்வமானவள்), பிங்கள (செம்மை நிறம் கொண்டவள்) என்று பல பெயர்கள் உனக்குக் கிடைக்கும். இத்திருத்தலத்திற்கு வந்து உன்னை வணங்கி வழிபடுபவர்களுக்கு அழகின் மீதிருக்கும் மோகம் குறையும்” என்று சொல்லி அவரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வைகுண்டம் திரும்பினார்.
உடலின் நிறம், பலம் போன்றவைகளால் கிடைக்கும் அழகு கால மாற்றத்தால் மாற்றமடையக் கூடியது. உடலின் அழகு நிலையானதில்லை. பிறருக்குத் தீங்கிழைக்காத மனமும், எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் பிறருக்கு உதவும் குணமும்தான் உண்மையான அழகு என்பதை உணர்த்தும் விதமாக மகாலட்சுமி பெற்ற சாபமும், விமோசனமும் இருக்கின்றன.
வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக என்ன செய்ய வேண்டும்?
உலகிலுள்ள அனைத்து செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள் மகாலட்சுமி. அது மட்டுமின்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைர்யம், வெற்றி, மன அமைதி என அனைத்தையும் வழங்குபவள் அவள்.
அதாவது, பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலட்சுமியாக வழிபடுவார்கள். தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, வீர லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, கஜ லட்சுமி இந்த எட்டு நிலைகளிலும் அருளும் அவளை வழிபடுவதால் அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிட்டும்.
எனவே வீடு லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். லட்சுமி தேவிக்கு விருப்பமான பொருட்களாக, நம்முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை வீட்டில் வைத்தால், அதனால் லட்சுமி தேவி ஈர்க்கப்படுவார். அவர் நம் வீட்டில் தங்குவார் என நம்பப்படுகிறது. இதனால் வீட்டில் செல்வம் பெருகும்.
இனிப்பு (கல்கண்டு)
இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.
மஞ்சள், குங்குமம்
மஞ்சள், குங்குமம் மிகவும் மங்களகரமாகவும், லட்சுமிக்கு உகந்தாகவும் கருத்தப்படுகிறது.
கல் உப்பு
பாற்கடலில் பிறந்தவள் லட்சுமி அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. அதனால் தான் பணத்தை போலவே உப்பையும் கடனாக கொடுக்க கூடாது என்பார்கள்.
தேன், நாணயங்கள்
பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்களாகும். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால் செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.
வில்வம் இலை
வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு 'லட்சுமி வாசம்' என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.
தாமரை
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படி செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.
கஜலட்சுமி
யானைகள் செல்வத்தின் அடையாளமாகும். யானையை லட்சுமியாக போற்றுகின்றனர். பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் மகாலட்சுமி, அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள் என்பது நம்பிக்கை.
இது தவிர இல்லத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டு, உள்ளத் தூய்மையுடன் காலை, மாலை ஆகிய நேரங்களில் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் பூரண லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
வீட்டின் முற்றத்தில் சானத்தில் மெழுகுதல் கோலமிடுதல், அதில் பூக்களை வைத்தல் போன்றவையாவும், மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் அமைப்பாகும். காலையில் தலைவாயிலைத் துய்மை படுத்தி படியில் கோலமிட்டு இரண்டு புறமும் பூக்களை வைத்து லட்சுமியைத் துதிக்க வேண்டும். இவற்றையெல்லாம் தினசரி செய்து வந்தால் லட்சுமி கடாட்சம் நிரந்தரமாகும்.
யாருடைய வீட்டில் லக்ஷ்மி நிரந்தரமாக தங்குவாள் தெரியுமா?
ஒருவருடைய வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாக வாசம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்ல. ஏனெனில் லட்சுமி தேவி என்பது பணம், சொத்துக்கள், ரத்தினங்கள், நகைகள் போன்றவற்றை குறிப்பதாகும்.
இவைகள் எல்லோரிடத்திலும் நிரந்தரமாகத் தங்கி விடுவது இல்லை. இன்று உங்களுடைய பொருள், நாளை வேறு ஒருவர் உடையதாக மாறிவிடுகிறது. இன்று உங்கள் கையில் இருக்கும் பணம், நாளை கட்டாயம் வேறு ஒருவர் கையில் தான் இருக்கும்.
ஆக பணம் என்பது நிலையானது அல்ல. அதே போல் தான் லட்சுமி தேவி நிரந்தரமாக ஓரிடத்தில் இருப்பதில்லை.
லக்ஷ்மி தேவிக்கு பிடித்த சில விஷயங்களை நாம் செய்யும் பொழுது, நம்முடனேயே நிரந்தரமாக தங்கி விடுவதும் உண்டு.
இதற்கு பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும். நல்ல கர்மாக்கள் அதிகமாக இருக்கும் எல்லோரிடமும் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது.
அதனால் தான் இன்று கெட்டதை ஒரு பணக்காரன் செய்து கொண்டிருந்தாலும், அவனுக்கு மென்மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அவன் செய்த பூர்வ ஜென்ம கர்மா அவனைப் பணக்காரனாகவே தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறது.
லட்சுமி தேவிக்கு பிடித்தமான விஷயங்கள் என்ன?
கையில் பணம் எந்த அளவிற்கு செலவாகிக் கொண்டே இருக்கிறதோ! அதே அளவிற்கு வரவாகவும் வரும்.
ஒருவருடைய கையில் பணம் தங்குவதற்கு முதலில் செய்ய வேண்டியது ஒன்றுதான். பணத்தை செலவு செய்வது! நீங்கள் பணத்தை எந்த அளவிற்கு செலவு செய்கிறீர்களோ! அந்த அளவிற்கு உங்களிடம் அது மீண்டும் மீண்டும் வரும் என்பது பணத்தின் உடைய ரகசிய விதியாகும்.
இம்மாதம் இவ்வளவு தான் சம்பளம் வரும். இதற்குள் என்ன செய்ய முடியுமோ? அதை தான் செய்ய முடியும் என்று நீங்களாகவே தடை போட்டு கொள்ள கூடாது.
அதுபோல் உங்களுக்காக பணத்தை செலவு செய்வதை விட, மற்றவர்களுக்காக மற்றவர்களுடைய பசியைப் போக்கவும், ஏழ்மையை தீர்க்கவும் ஒரு சிறு தொகையை செலவு செய்தால் கூட, நீங்கள் ஆச்சரியப்படும் வகையில் பணம் உங்களைத் தேடி வரும்.
இதைக் கேட்பதற்கு நம்ப முடியாத மாதிரி இருந்தாலும், செய்து பார்த்தால் உங்களுக்கே உண்மை புரியும். பல அறிஞர்கள் தங்களுடைய அனுபவத்தில் கண்ட உண்மையான பரிகாரம் இதுதான்.
‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்’ என்பது பழமொழி மட்டுமல்ல உண்மையும் கூட. (alert-success)
பணம் அதிகமாக இருப்பவன் அன்னதானங்கள் செய்வதும், அடுத்தவர்களுக்கு பணமாக உதவி செய்வதும், பொருளாக உதவி செய்வதும் சுலபமான விஷயம் தான்.
ஆனால் பணம் இல்லாதவர்கள் இவற்றையெல்லாம் செய்வது கடினம். அப்படிபட்ட நீங்கள் என்ன செய்யலாம் தெரியுமா?
யாருடைய மனதில் உண்மையாக மற்றவர்களுக்கு உதவ வேண்டும்? என்கிற எண்ணம் இருக்கிறதோ! அவர்களிடத்தில் கட்டாயம் லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வாசம் செய்கிறாள்.
உண்மையான மனதுடன் தினமும் ஒருவருடைய பசியைப் போக்கி பாருங்கள்.
நீங்கள் தொழில் செய்பவராக இருந்தாலும், வணிகம் செய்பவர்களாக இருந்தாலும், உத்தியோகத்தில் மாத சம்பளம் வாங்குபவராக இருந்தாலும், உங்களுக்கு கிடைக்கும் ஒரு சிறிய நேரத்தில் மற்றவர்களுடைய பசியை போக்குவதற்கு உதவி செய்யுங்கள்.
தினமும் செய்ய முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செய்யுங்கள். மனிதர்களுக்கு மட்டுமல்ல, வீட்டில் மொட்டை மாடி பகுதியில் தண்ணீர் வைப்பதும், தானியங்கள் வைப்பதும் கூட பறவைகளின் பசியை போக்கும். வாசலுக்கு வெளியில் பாக்கெட்டில் தண்ணீரை வைத்தால் ஆடு, மாடு, நாய் போன்ற விலங்குகள் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும்.
நீங்கள் சாதம் வடிக்கும் கஞ்சி தண்ணீரை எப்பொழுதும் வீணாக்கி விடாதீர்கள். அவற்றை சேகரித்து பசுமாட்டிற்கு வையுங்கள்.
தினமும் வீட்டில் வீணாகும் காய்கறிகள், பழங்கள் இந்தக் கஞ்சி தண்ணீருடன் சேர்த்து பசு மாட்டிற்கு வைக்கும் பொழுது லக்ஷ்மி தேவி உங்களிடம் நிரந்தரமாக வாசம் செய்வாள்.
கஷ்டப்பட்ட உறவினர்களுக்கு உங்களிடம் இருக்கும் பண உதவி தாராளமாக செய்யுங்கள். பிரதிபலனை எதிர்பாராமல் செய்யுங்கள்.
லட்சுமி தேவியின் பல பெயர்கள்
திருமகளான லட்சுமி பல பெயர்களை கொண்டு துதிக்கப்படுகிறாள். லட்சுமி தேவியின் பெயரையும் அதன் பொருளையும் அறிந்து கொள்ளலாம்.
ஹிரண்யவர்ணா - பொன்னிறத்தவள்
ஹரிணி - மான் வடிவினள்
சந்திரா - மதி போன்றவள்
அனபகா முனீம் - நிலை தவறாதவள்
ஆர்த்திரா - நீரில் தோன்றியவள்
பத்மே ஸ்திதா - தாமரையில் வசிப்பவள்
யத்மவர்ணா - தாமரை வண்ணத்தாள்
ஆதித்யவர்ணா - சூரியகாந்தி உடையவள்
வருஷோபில்வ - கூவளத்தில் தோன்றியவள்
கரிக்ஷிணீ - பெருகும் பசுச்செல்வமுடையவள்
ஈஸ்வரி - எல்லா உயிரிலும் உறைபவள்
புஷ்கரணீ - யானைகளால் வணங்கப்படுகிறவள்
பிங்களா - செம்மை நிறம் கொண்டவள்
பக்கரிணி - தரும தேவதை
சூர்யா - கதிரவனை நிகர்த்தவள்
ஹிரண்யமயீ - பொன்னி
ஹரிணி - பச்சை மேனியன் (மான் என்று அர்த்தமும் உண்டு.

Your comment will be visible after approval.