
Table(toc)
திருமாலின் 108 திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்புமிக்கதாகும். அதில் முதலிடத்தில் உள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலையம்.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். பெருமாள் சயனக்கோலத்தில் இருக்கும் திருத்தலங்களுள் மிகவும் முக்கியமானது திருவட்டாறு அதிகேசவப் பெருமாள் திருத்தலம். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வைணவத்திருத்தலம், 108 வைணவத் திருத்தலங்களுள் 76 ஆவாதாக எண்ணப்படுகிறது.
இந்த கோவில் உள்ள இடம்
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள பெருமாள், 16008 சாளக்கிராம கற்களால்லும், கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையாலும் செய்யப்பட்டவர். தெற்கே தலை வைத்து திருவனந்தபுரம் அனந்தபத்மநாபரை பார்த்தாவரே மேற்கு நோக்கி அருள் புரிகிறார்.
22 அடி நீள பெருமாள்
தெற்கே தலை வைத்து,வடக்கே கால் நீட்டி, மேற்கே பார்த்த படி ஆதிசேசனின் மேல் நித்திரை கோலத்தில் 22 அடி நீள பெருமாள் காட்சி தரும் திருக்கோயில் ஆதிசேசவ பெருமாள் கோயில்.
700 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர்
அதிசய நந்தி கோயில் கன்னியாகுமரியின் திருவட்டாறு பகுதியில் அமைந்துள்ள இந்த கோயில், பரளி ஆறு வட்டமாக ஓடுவதால் திருவட்டாறு என பெயர் பெற்றது.
தல சிறப்புகள்
108 வைணவ திருத்தலங்ளில் இதுவும் ஒன்று . கோயில் எப்போது கட்டப்பட்டது என சரியான தகவல் இல்லை இருப்பினும் சோழர் காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என வரலாறு ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கிபி 9ம் நூற்றாண்டை சேர்ந்த நம்மாழ்வார் இக்கோயில் குறித்து “வட்டாற்று கேசவன்” என மங்களாசனம் பாடியுள்ளதிலிருந்து, இந்த கோயில் குறைந்த பட்சம் 1200 ஆண்டுகள் பழைமையானது என தெரிகிறது.
கோயில் அமைப்பு: கோயிலில் உள்ள தூண்ட்கள், கதவுகள் மேற்கூரைகளும் மரத்தால் செய்யப்படிருக்கின்றன. கோயிலின் 5 கலசங்கள் செம்பு தகட்டால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.
3 வாயில்
பெருமாள் 22 அடி நீளம் கொண்டு காட்சி அளிப்பதால் ஒரு வாசல் வழியாக முழுமையாக தரிசிக்க முடியாது என்பதால் திருத்தலை, திருக்கரம், திருப்பாதம் என மூன்று வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது.
அபிஷேகம் கிடையாது
பெருமாள் மேனி கடுசர்க்கரைப் பூச்சால் செய்யப்பட்டிருப்பதால் அவருக்கு அபிஷேகம் செய்ப்படுவது கிடையாது. அவருக்கு பதிலாக உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சுற்றியோடும் ஆற்றின் நடுவே உள்ள இக்கோயிலில் பூசை செய்பவர்கள் பிராமணர்கள் இல்லை.
சிறப்பம்சம்
ஆண்டில் இரண்டு மாதங்களில் (புரட்டாசி & பங்குனி) 6 நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேராக கர்ப்பக்கிரகத்தின் உள்ளே விழும் வகையில் கோயில் கட்டப்பட்டுள்ளது சிறப்பம்சம். பிற்காலத்தில் (கி.பி 1604 ல்) கட்டப்பட்ட ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லில் உருவாக்கப்பட்டது.
பிரமாண்ட திருமேனியாக ஆழ்துயிலில் இருக்கும் இந்த பெருமாள் திருமேன்னி 22 அடி நீளம் உடையது. இவரை ஒரே காட்சியில் தரிசிக்க இயலாது. இவரை முழுவதும் தரிசிக்க மூன்று வாயல்களை தரிசிக்க வேண்டும். இதனை திருமுகம், திருக்கரம், திருப்பாதம் என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோவிலின் புராணங்கள்
திருக்கர வாயிலில் உள்ள உற்சவர் நின்ற கோலத்தில் ஶ்ரீதேவி, பூதேவியுடன் அருளுகிறார். இங்குள்ள பெருமாளின் நாபியில் தாமரையோ, பிரம்மனோ கிடையாது .
இதனால் இவரை வணங்கினால் மறு பிறவி கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாளின் மேனி கடுசர்க்கரைப் கலவையால் செய்யப்பட்டிருப்பதால் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவருக்கே செய்யப்படுகிறது.
இங்கு பள்ளி கொண்டுள்ள ஆதிகேசவரின் திருப்பாதத்தை வட்டமிட்ட வாறு பரளியாறு ஓடுவதால், இந்த ஊருக்கு திருவட்டாறு என்று பெயர். கேசன் என்ற அசுரனை விஷ்ணு பெருமான் அடக்கிய தலம் இதுவென புராணங்கள் சொல்கின்றன.
இந்த கோவிலின் அதிசயம்
அதிசய நிகழ்வாக சூரியனுக்கும், சந்திரனுக்கும் ஆதிகேசவப் பெருமாள் இந்த தலத்தில் காட்சி கொடுத்ததால் இக்கோவிலின் கருவறையில் சூரியனும், சந்திரனும் அமைந்துள்ளன்னர்.
இந்த கோவிலின் மற்றொரு அதிசயமாக புரட்டாசி மற்றும் பங்குனி மாதத்தின் 6 நாட்கள் மட்டும் சூரிய கதிர்கள் நேராக கர்ப கிரகத்தின் உள்ளிருக்கும் பெருமாள் மேல் விழுகிறது.
இந்த காட்சியை காண்பது அரிதென்பதால். இந்நாட்களில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இங்கே காண முடிகிறது. இக்கோவிலின் மற்றுமொரு தனித்துவமான அம்சமாக இருப்பது.
இக்கோவில்ன் பூஜை முறை
இங்கு பூஜைகள் செய்பவரை போத்திமார் என்றழைக்கிறார்கள்.
அதே வேளையில் இக்கோவிலின் கட்டிடக்கலை பெரும் புகழ் பெற்றது. தனித்துவமாக சயன கோலத்தில் இருக்கும் பெருமாளின் அருகில் பரமசிவன் காட்சியளிக்கிறார்.
விஷேசங்கள்
இங்கிருக்கும் சிறப்புமிக்க ஒற்றைக்கல் மண்டபம் ஒரே கல்லால் ஆனது என்பது பெரும் ஆச்சர்யம்.
இக்கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் திருவிழாக்கள் விமர்சையாக நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதேசி மிகவும் பிரசித்தமனது. தமிழக பண்டிகைகள் கொண்டாடப்படும் அதே வேளையில், கேரளா பண்டிகைகளான ஓணம், சித்திரை விஷு ஆகியவையும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
Your comment will be visible after approval.