
புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாதவை:
புதிய வீடு வாங்குதல், புதிதாக தொழில் வியாபாரம் தொடங்குதல், கிரகப்பிரவேசம் அல்லது புதுமனை புகுவிழா செய்தல் வாடகைக்கு குடிபுகுதல் போன்ற சுபகாரியங்கள் இந்த மாதத்தில் செய்யப்படுவதில்லை என்பதை தெரிந்து கொள்ளவேண்டும்.
புரட்டாசி மாதத்தில் செய்யக்கூடாத விஷயங்கள் :
- புரட்டாசி மாதத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யக்கூடாது. ஆனால் 60ம் கல்யாணம், வளைகாப்பு, காது குத்துதல் செய்யலாம்.
- இந்த மாதத்தில் வாஸ்து நாள் இல்லாத காரணத்தால், புதிதாக வீடு கட்ட, வாஸ்து பூஜை செய்வது, புதிதாக கட்டப்பட்ட வீட்டிற்கு கிருகப்பிரவேசம் செய்து பால்காய்ச்சுவதற்கு புரட்டாசி மாதம் ஏற்றதல்ல.
- அதுமட்டுமில்லாமல் புரட்டாசி மாத்தில் வாடகை வீடு மாறுவதும் கூடாது. இருப்பினும், ஒரு நிலம், மனை வாங்கி பத்திரப் பதிவு செய்ய ஏற்ற மாதமாகும்.
- புரட்டாசி மாதம் முழுவதும் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது அவசியம்.
புரட்டாசியில் செய்ய வேண்டியது விஷயங்கள் :
புரட்டாசி மாதம் என்பது சூரியன், கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யக்கூடிய காலமாகும். சூரியன் தென் திசை நோக்கி தனது பயணத்தை தொடங்கக்கூடிய மாதம்.
புதன் பகவான் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும், புதன் பகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவை வழிபடுவதால், நமக்கு சனி, ராகு, கேது போன்ற கிரகங்களால் ஏற்படக்கூடிய தோஷங்கள் நீங்கும்.
- புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் வழிபாடு
- மகாளயாபட்சம், மகாளய அமாவாசை இந்த நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட உகந்த நாட்களாகும்.

Your comment will be visible after approval.