Dal Makhani
தால் மக்கானி இந்தியாவில் இருக்கும் பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு சைடிஷ். தால் மக்கானி பஞ்சாபில் உள்ள அனைத்து ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் சிறிய உணவகங்களிலும் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் இவை குறிப்பிட்ட ரெஸ்டாரன்ட்டுகளில் தான் இடம் பிடித்து இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
- 1 கப் இரவு ஊறவைத்த உடைந்த கருப்பு பருப்பு
- 1 கப் சிவப்பு காராமணி
- 1 கப் நறுக்கிய வெங்காயம்
- 1 கப் மசித்த தக்காளி
- தேவையான அளவு உப்பு
- 1/4 தேக்கரண்டி மஞ்சள்
- 1 தேக்கரண்டி மிளகாய் பொடி
- 1 தேக்கரண்டி கொத்தமல்லி பொடி
- 1 தேக்கரண்டி இஞ்சி
- 1 தேக்கரண்டி பூடு
- 1 தேக்கரண்டி சீரகம்
- 1 தேக்கரண்டி கடுகு எண்ணெய்
- 1 தேக்கரண்டி எண்ணெய்
- தேவையான அளவு வெட்டிய பச்சை மிளகாய்
- அலங்கரிப்பதற்கு 1 தேக்கரண்டி புதிய கிரீம்
செய்முறை :
Step 1: குக்கரை அடுப்பில் வைத்து கருப்பு ஊளுந்தையும் ராஜ்மாவையும் சேர்த்து அத்துடன் தண்ணீர் சேர்த்து வேகவிடுங்கள். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் சிறிது உப்பு, மஞ்சள் மற்றும் கடுகு எண்ணெய் சேர்க்கவும். குறைந்த தீயில் வேகவைத்து 7 முதல் 8 விசில் வரும் வரை வேகவிடவும்.
Step 2: ஒரு தனி பேனில் எண்ணைய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்த்து 20 முதல் 30 விநாடிகள் வதக்கவும். பிறகு இதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்போது சீரகம் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
Step 3: இதில் மசித்த தக்காளி சேர்த்து 3 முதல் 4 நிமிடங்கள் வேகவைத்து பிறகு பச்சை மிளகாய் மற்றும் சிகப்பு மிளகாய் தூளை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இப்போது மசாலா ரெடி.
Step 4: பருப்பு 8 முதல் 10 விசில் வரை வெந்த பிறகு குக்கர் மூடியைத் திறந்து வேகவைத்த மசாலாவுடன் பருப்பை சேர்க்கவும். சுவையை அதிகரிக்க இந்த கட்டத்தில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
Step 5: இப்போது சுவையான தால் மக்கானி பரிமாறுவதற்கு தயாராக உள்ளது. உங்கள் விருப்பத்திற்கேற்ப ரொட்டி, சப்பாத்தி அல்லது பராத்தா போன்றவற்றுடன் சேர்த்து சுவைத்து மகிழலாம்.

Your comment will be visible after approval.