Aloo Kurma
உருளைக்கிழங்கு குருமா செய்வது எப்படி ?
உருளைக்கிழங்கு குருமா செய்ய தேவையான பொருட்கள் :
- 6 to 7 உருளைக்கிழங்கு
- 3 பெரிய வெங்காயம்
- 5 to 6 தக்காளி
- 1 கப் பச்சை பட்டாணி
- 1 to 2 பச்சை மிளகாய்
- 4 to 5 பூண்டு
- 1 இஞ்சி துண்டு
- ¼ மேஜைக்கரண்டி மஞ்சள் தூள்
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மல்லி தூள்
- 1 மேஜைக்கரண்டி ஆம்சூர் தூள்
- 1 மேஜைக்கரண்டி பச்சை பயறு மாவு
- 1 மேஜைக்கரண்டி கரம் மசாலா
- 1 மேஜைக்கரண்டி பெருங்காய தூள்
- தேவையான அளவு மிளகாய் தூள்
- தேவையான அளவு நெய்
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கொத்தமல்லி
உருளைக்கிழங்கு குருமா செய்முறை :
முதலில் வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்து கொள்ளவும்.
பச்சை பட்டாணியை உரித்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
அடுத்து நாம் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மற்றும் இஞ்சியை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதை நன்கு பேஸ்ட் ஆக்கி ஒரு கிண்ணத்தில் ஊற்றி வைத்து கொள்ளவும்.
பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 3 மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
நெய் சுட்ட பின் அதில் சீரகத்தை போட்டு அதை சுமார் அரை நிமிடம் வரை வறுக்கவும்.
அரை நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு வெங்காயம் பொன்னிறமாகும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்ட்டை ஊற்றி அதை நன்கு கலந்து விட்டு அதிலிருந்து நெய் தனியாக பிரிந்து வரும் வரை அதை வதக்கவும். (சுமார் 7 லிருந்து 8 நிமிடம் வரை வதக்கினால் சரியாக இருக்கும்.)
8 நிமிடத்திற்கு பிறகு அதில் பச்சை பயறு மாவு, மஞ்சள் தூள், மல்லி தூள், ஆம்சூர் தூள், மற்றும் அவரவர் விருப்பத்திற்கேற்ப மிளகாய் தூளை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை நன்கு கலந்து விடவும். (500ml அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)
பின்னர் அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் உரித்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை போட்டு அது நன்கு மசாலா ஒட்டுமாறு அதை கிளறி விடவும்.
அடுத்து அதில் மீண்டும் ஒரு முறை சுமார் 500ml அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பை போட்டு அதை நன்கு கலந்து விட்டு பின்பு ஒரு மூடி போட்டு அதை சுமார் 10 லிருந்து 15 நிமிடம் வரை வேக விடவும்.
15 நிமிடத்திற்கு பிறகு மூடியை திறந்து குருமாவை ஒரு கிளறு கிளறி அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் கரம் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து விடவும்.
பின்பு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் ஒரு மேஜைக்கரண்டி அளவு நெய்யை ஊற்றி அதை சுட வைக்கவும்.
நெய் சுட்ட பின் அதில் ஒரு மேஜைக்கரண்டி அளவு பெருங்காயத்தை போட்டு அதை நன்கு கரைத்து விட்டு பின்பு அடுப்பை அணைத்து விட்டு அதை குருமாவில் ஊற்றி நன்கு கலந்து விட்டு சுமார் 2 நிமிடம் வரை வேக விடவும்.
2 நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு குருமாவை ஒரு கிண்ணத்தில் ஊற்றி அதை சப்பாத்தியுடனோ அல்லது பூரியுடனோ சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மிகவும் அட்டகாசமாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா தயார்.


Your comment will be visible after approval.