Prawn Pepper Fry - Prawn Pepper Masala - Shrimp Pepper Fry
இறால் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள் :
- 250 கிராம் இறால்
- 1 பெரிய வெங்காயம்
- 3 பல் பூண்டு
- 1 இஞ்சி துண்டு
- 2 to 3 காய்ந்த மிளகாய்
- 2 மேஜைக்கரண்டி தனியா
- 1 மேஜைக்கரண்டி சீரகம்
- 1 மேஜைக்கரண்டி மிளகு
- 2 பட்டை துண்டு
- 3 கிராம்பு
- 1 ஏலக்காய்
- தேவையான அளவு cooking oil
- தேவையான அளவு உப்பு
- சிறிதளவு கருவேப்பிலை
- சிறிதளவு கொத்தமல்லி
செய்முறை :
- முதலில் நீளவாக்கில் மெலிதாக வெங்காயம் வெட்டவும், கருவேப்பிலை, மற்றும் கொத்தமல்லியை நறுக்கி வைத்துகொள்ளவும், இஞ்சி பூண்டை பேஸ்ட் போல அரைத்துக்கொள்ளவும், மற்றும் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- அடுத்து ஒரு P an ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் தனியா, சீரகம், மற்றும் மிளகை போட்டு அதை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
- அது நன்கு வாசம் வந்ததும் அதை எடுத்து ஒரு தட்டில் கொட்டி பரப்பி விட்டு சிறிது நேரம் ஆற விட்டு பின்பு அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.
- எண்ணெய் சுட்ட பின் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு, மற்றும் காய்ந்த மிளகாயை சேர்த்து அதை சுமார் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அதை நன்கு கலந்து விட்டு வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை அதை வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை போட்டு இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
- இஞ்சி பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் சுத்தம் செய்து கழுவி வைத்திருக்கும் இறாலை போட்டு அது நன்கு வெங்காயத்துடன் சேருமாறு அதை கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு அதை நன்கு கலந்து விட்டு சுமார் 4 லிருந்து 5 நிமிடம் வரை வேக விடவும்.
- 5 நிமிடத்திற்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை தூவி அதை நன்கு கலந்து விட்டு சுமார் ஒரு நிமிடம் வரை வேக விடவும்.
- ஒரு நிமிடத்திற்கு பிறகு அடுப்பை அணைத்து விட்டு இறால் மிளகு வறுவலை எடுத்து ஒரு தட்டில் வைத்து அதை சுட சுட பரிமாறவும்.
இப்பொழுது உங்கள் சூடான மற்றும்
மிகவும் அசத்தலாக இருக்கும் இறால் மிளகு வறுவல் தயார்.
#Prawn Pepper Fry - Prawn Pepper Masala - Shrimp Pepper Fry*


Your comment will be visible after approval.