அதாவது ஊரான் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையேன்னானாம்.... அப்டீன்னு எங்க ஊர்ல ஒரு சொலவடை உண்டு. அது என்னன்னு பார்ப்போமா....
வீட்டுல பொண்டாட்டிகாரி ரொம்பச் சிக்கனமா, பார்த்துப் பார்த்துச் செலவழிப்பாளாம். சாப்பாட்டுக்கு நெய் ஊத்துறதுன்னா... ஈர்க்குச்சியில தொட்டு அப்டீயே லேசாத் தெளிச்சு விட்டுட்டுப் போவாளாம். அதுல ஒன்னு ரெண்டு சொட்டு கூட விழாது... என்னடி இப்டி ஊத்துறன்னு கேட்டா.... போதும்... போதும்... லேசா வாசம் வந்தா போதும்... அதை மோப்பம் பிடிச்சுட்டே சாப்பிட்டுருங்க...ன்னுருவாளாம்.
அதுவே ஊர்ல தெரிஞ்சவங்க யார் வீட்டுலயாச்சும் விசேஷம்னா.... புருசங்காரன் பந்தியில சாப்பிட உட்காரும்போது..... இவ பந்தி பரிமாறுறேன்னு களத்துல இறங்கி, நெய்த்தூக்குவாளியைக் கையில எடுத்துக்கிட்டு.... புருசங்காரன் இருக்க வரிசையில வந்து.... எல்லோருக்கும் லேசா இப்டி அப்டின்னு கரண்டியைக் காட்டிக்கிட்டே வந்து... புருசங்காரன் இலையில மட்டும்.... டபக்கு டபக்குனு மூணு நாலு கரண்டி நெய்யை ஊத்திட்டு... அவனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிச்சுட்டுப் போவாளாம்....
அப்பதான் அவனுக்குத் தோனுமாம்.... அடிக்கள்ளி.... ஊராம் வீட்டு நெய்யே... என் பொண்டாட்டி கையேன்னா...னாம்னு....
அதாவது தன் வீட்டுலன்னா. பார்த்துப் பார்த்துச் செலவழிச்சுட்டு... ஊரான் வீட்டுல வந்து தாராளமா எடுத்து ஊத்திக் கொடுப்பாளாம்.
கட்டுனா... அந்த மாதிரி பொண்ணாப் பார்த்து கட்டனும்... பாத்துக்குங்க...

Your comment will be visible after approval.