சிவ பெருமான் கோவில் கொண்டுள்ள தலங்களில் முக்கியமானதாக கருதப்படுவது பஞ்ச பூத தலங்கள். காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சிதம்பரம், திருவானைக்காவல், காளகஸ்தி ஆகிய ஐந்து தலங்கள் மட்டுமின்றி சென்னை, மதுரை உள்ளிட்ட ஊர்களிலும் பஞ்ச பூதங்களின் வடிவமாக கோவில் கொண்டு சிவ பெருமான் அருள்பாலிக்கிறார்
1. திருவாரூர் அல்லது காஞ்சிபுரம் (பிருதிவி) மண்
2. திருவண்ணாமலை (தேயு) தீ
3. திருவானைக்காவல் (அப்பு) நீர்
4. திருக்காளகஸ்தி (வாயு) காற்று
5. சிதம்பரம் (ஆகாயம்) வெளி
பஞ்ச சபைகள் :
1. திருவாலங்காடு - இரத்தின சபை
2. சிதம்பரம் - கனக சபை
3.மதுரை - ரஜித சபை
4.திருநெல்வேலி - தாமிர சபை
5. திருக்குற்றாலம் - சித்திர சபை
தக்ஷிண கைலாசம் :
1. திருக்காளகஸ்தி
2. திருச்சிராப்பள்ளி
3.திருக்கோணமலை
முக்தி தரும் கோவில்கள் :
1. அயோத்தி
2. மதுரா
3. மாயா (பூரி)
4. காசி
5. காஞ்சி
6. அவந்திகா
7. துவாரகை
வீரட்டங்கள் :
1. திருக்கண்டியூர் - பிரமன் சிரங் கொய்தது
2. திருக்கோவலூர் - அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை - திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர் - தக்கன் சிரங் கொய்தது
5. திருவிற்குடி - சலந்தராசுரனைச் சங்கரித்தது
6.வழுவுர் (வைப்புத்தலம்) - யானையை உரித்தது
7. திருக்குறுக்கை - காமனை எரித்தது
8. திருக்கடவூர் - யமனை உதைத்தது

Your comment will be visible after approval.