இட்லி தோசைக்கு பூண்டு சட்னி.
தேவையான பொருள்கள் :
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 25 பல்
புளி - 10 கிராம்
காய்ந்த மிளகாய் - 5 gram
தாளிக்க
கடுகு ,உளுந்தப்பருப்பு
நல்லெண்ணணெய் - 1 குழி கரண்டி அளவு
பெருங்காய தூள் - கால் ஸ்பூன்
செய்முறை :
கடாயை அடுப்பில் வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து நைஸாக அரைத்து கொள்ளவும்.
பின் கடாயில் மீதி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தப்பருப்பு, பெருங்காய தூள் போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் ஊற்றி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பரான பூண்டு சட்னி ரெடி .

Your comment will be visible after approval.