நீரால் கோலம் போடாதே
நெற்றியைக் காலியாய் விடாதே
குச்சியைக் கொளுத்தி வீசாதே
இரவில் ஊசியை எடுக்காதே
கால் மேல் காலைப் போடாதே
கவட்டையில் துணியை சொருகாதே
காலையில் அதிகம் தூங்காதே
மாலையில் அதிகம் சிரிக்காதே
தொடையில் தாளம் போடாதே
தரையில் வெறுமென கிடக்காதே
மலஜலம் அடக்கி வைக்காதே
மார் தட்டி பேசாதே
நகத்தை நீட்டி வளர்க்காதே
ஆலயம் செல்லத் தவறாதே
அளவு இல்லாமல் உண்ணாதே
அள்ளிக் கொடுக்க மறவாதே
அனைத்தையும் உண்ணத் தவறாதே
அதிகமாக பேசி நோகாதே
எண்ணெய் தேய்க்க மறக்காதே
முச்சந்தியில் நீயே உண்ணாதே
விரிப்பைச் சுருட்ட மறக்காதே
பகலில் படுத்து உறங்காதே
இரவில் உறங்காமல் இருக்காதே
குளிக்கும் முன்பு புசிக்காதே
ஈரம் சொட்ட நிற்காதே
திரு நாமம் சொல்ல மறக்காதே
நல்ல குடியைக் கெடுக்காதே
தீய வார்த்தை பேசாதே
தீமைக்கு துணை போகாதே
தீயோர் சொல் கேட்காதே
நின்று தண்ணீர் குடிக்காதே
எதையும் காலால் தட்டாதே
எச்சில் பட்டதை திண்ணாதே
என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே!

Your comment will be visible after approval.