திருத்தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும்
அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்
கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி
கனிவுடனே முருகவேளும் சிரித்திடும் காட்சி
அதைக் காண்பவர்க்கு எந்த நாளும் இல்லையே வீழ்ச்சி
விளங்கிவரும் சேவற்கொடி விண்ணதில் ஆடும்
அது வேல்முருகன் அடியவர்தம் வினையினைச் சாடும்
குலுங்கிவரும் தென்றலங்கே ...
குலுங்கிவரும் தென்றலங்கே இசை முழக்கும்
திருக்குமரன் பேர் சொல்லிச்சொல்லி
நமை மயக்கும்
தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும்
திருத்தணிகை மலை படிகளெல்லாம் திருப்புகழ் பாடும்
அங்கே தனை மறந்து மயில்களெல்லாம் நாட்டியமாடும்..
முருகா சரணம்...

Your comment will be visible after approval.