என்னங்க இன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்?
கணவன்:
பருப்பும் சாதம் செஞ்சிருமா.
மனைவி:
நேத்துதானே அதைச் சாப்பிட்டோம்.
கணவன்:
அப்படின்னா இன்னைக்கு கத்திரிக்காய் வறுவல் பண்ணிருமா.
மனைவி:
உங்கப் பையனுக்கு கத்திரிக்கா நாவே பிடிக்காது இது கூட உங்களுக்கு தெரியாதா?
கணவன்:
முட்டைப் பொரியல் பண்றியா?
மனைவி:
இன்னைக்கு வெள்ளிக்கிழமை அதுவுமா முட்டை பொரியலா?
கணவன்:
அப்ப பூரி பண்றியாமா?
மனைவி:
மாவு யாரு பிசையரது அது மட்டும் இல்லாம நைட் எவனும் பூரி சாப்பிட மாட்டான்.
கணவன்:
நான் வேணா ஹோட்டல் போய் பார்சல் வாங்கிட்டு வரவா?
மனைவி:
ஹோட்டல்ல சாப்பிட்டா உடம்ப கெட்டு போயிருங்க...
கணவன்:
அப்ப மோர் குழம்பு செய்யறியா?
மனைவி:
வீட்ல மோர் இல்லையே.
கணவன்:
அப்ப இட்லி சாம்பார் செய்யறியா?
மனைவி:
நீங்க முன்னாடியே சொல்லி இருக்கணும். மாவு பிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து வைக்கவே இல்லையே.
கணவன்:
அப்ப நூடுல்ஸ் பண்ணு. கொஞ்ச நேரத்துல செஞ்சுடலாம்.
மனைவி:
நூடுல்ஸ் சாப்பிட்ட மாதிரியே இருக்காது. மறுபடி உடனே பசி எடுக்கும்.
கணவன்:
வேற என்னதான் சமைக்கப் போறே?
மனைவி:
நீங்க என்ன சொல்றீங்களோ அதையே செய்றாங்க.
கணவன்:
நீ ஆணியே புடுங்க வேண்டாம் எனக்கு சாப்பாடே வேணாம் போடி...!

Your comment will be visible after approval.