விட்டு சென்றிருக்கிறார். அவனை வளர்த்து ஆளாக்குவது ஒன்றே இனி என் வேலை.
அவனுக்காகவே வாழ போகிறேன்.
இன்னொரு துணை எனக்கு தேவையில்லை என்று, அவள் கணவரின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினாள்.
வருடங்கள் உருண்டோடியது. மகன் வளர்ந்து பெரியவனானதும், தன் வீட்டையும், வியாபாரத்தையும்
மகனிடம் எழுதி கொடுத்துவிட்டு ஓய்வு பெற்றாள்.
மகனுக்கு திருமணமும் செய்து வைத்து, அவர்களுடனேயே தங்கியும் விட்டாள்.
ஒரு வருடம் போனது. ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக,
கொஞ்சம் சீக்கிரமாக காலை உணவு உண்ண,
மருமகளிடம் "நெய் தோசை" தருமாறு கேட்டார்.
மருமகளோ நெய் தீர்ந்துவிட்டது என்று சொல்லி விட்டாள்.
மகன் அதை கேட்டுக் கொண்டு, தானும் உணவருந்த உட்கார, தாய் வெறும் தோசையை உண்டு விட்டு நகர்ந்தார்.
மகன் உணவருந்தும் போது, மேஜையில் "நெய் தோசை"
கொண்டு வந்து வைத்தாள் மனைவி. ஒன்றும் பேசாமல் மகன் தன் வியாபாரத்துக்கு புறப்பட்டான்.
"நெய் தோசையை" பற்றிய சிந்தனையே அந்நாள் முழுதும் அவன் எண்ணத்தில் ஓடிக் கொண்டிருந்தது
மறுநாள் காலையில் தன் தாயை அழைத்தான்.
அம்மா வாருங்கள் நாம் வக்கீலை பார்த்துவிட்டு வருவோம் என்றான். ஏன் எதற்காக என்று தாய் கேட்க...
நானும் என் மனைவியும் வாடகை வீட்டுக்கு குடி போகிறோம்.
என் பெயரில் எழுதிய அனைத்தையும் உங்கள்
பெயருக்கே மாற்றி கொள்ளுங்கள்.
இந்த வியாபாரத்திலும் இனி நான் உரிமை
கொண்டாட மாட்டேன்.
மாதா மாதம் சம்பளம் வாங்கும் சராசரி தொழிலாளியாக இருந்து விட்டு போகிறேன்,
என்றான்..
ஏன் இந்த திடீர் முடிவு?.
இல்லை அம்மா உங்கள் மதிப்பு என்னவென்று என் மனைவிக்கு உணர்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது...
சாதாரண "நெய்க்கு" கையேந்தும் நிலை வரக்கூடாது.
ஒரு பொருளை பெறுவதில் உள்ள கஷ்டத்தை அவள் உணர வேண்டும்.
மறுப்பு சொல்லாதீர்கள் என்றான்...
பெற்றவர்கள் பிள்ளைகளுக்கு ATM கார்டாக இருக்கலாம்.. ஆனால் பிள்ளைகள் என்றும்
ஆதார் (அடையாள) கார்டாக இருக்க வேண்டும் என்பதே இந்த கதையின் கருப்பொருள்.
"பெற்றவர்களை புறக்கணிக்காதீர்கள். அவர்கள் இல்லாமல் உங்களுக்கு அடையாளம் என்பதே இல்லை.

Your comment will be visible after approval.