Arudra Darshan
ஆருத்ரா தரிசன மகிமைகள்
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சிவபெருமானை போற்றும் இந்த திருவாசக மந்திரத்தை தினந்தோறும் கூறி வழிபடுவது நல்லது,துதித்து வழிபட தெய்வ வசியம் ஏற்படும். குரு கிரகத்தின் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தியின் அருளால் குரு கிரக தோஷங்கள் நீங்கும்.
சிவன் வீற்றிருக்கும் கயிலாயம் வடக்கில் இருக்கும் போது, தென்னாடுடைய சிவனே போற்றி என்று கூறுவது ஏன்?“ எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி” என்ற அடுத்த வரியை கவனித்திருக்கிறீர்களா. தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்ற இந்த வரிகளை நாம் திருவாசகத்தில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். திருவாசகத்தில் ‘போற்றித் திருஅகவல்’ எனும் நான்காம் அத்தியாயத்தில் இடம்பெற்றிருக்கும் இவ்விரண்டு வரிகளும் என்றென்றும் நம் நினைவில்நிற்பவையாக அமைந்துவிட்டது. திருவாசகத்தைப் பற்றி அறியாதவர் கூட இந்த வரிகளை நிச்சயமாக உச்சரிக்கத் தயங்க மாட்டார்கள். அவ்வளவு ஏன், நம்மில் பலருக்கும் இந்தவரிகள்திருவாசகத்தில்உள்ளவரிகள் என்பது கூட தெரிந்திருக்காது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தை இயற்றிய காலத்தில் தென்னகத்தில் சைவ சமயத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. சமயச் சண்டைகள் அதிகமாக இடம் பெற்றிருந்தாலும் மாணிக்கவாசகர் முதலான ஆன்மிகப் பெரியோர்களுக்கு இறைவன் என்பது ஒருவனே என்பது நன்றாகத் தெரியும். அதனை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இறைவனை நோக்கி அவர் இவ்வாறு பாடுகிறார். தென்னாடுடைய சிவனே போற்றி. அதாவது,தென்னகத்தில் உள்ளோர் உன்னை சிவனாகக் கண்டு போற்றுகிறோம். 'எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.' அதாவது, எந்தநாட்டிலும் உள்ளோரும் உன்னை (இறைவனாக)இறையாகக் கண்டு போற்றுகிறார்கள். ஆகஉலகத்தில் உள்ள எல்லா நாட்டவரும் காணும் இறைவனும், தென்னகத்தில் உள்ளோர் காணும் சிவனும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் விதமாக மாணிக்கவாசகர் 'தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி' என்று வலியுறுத்திப் பாடுகிறார்.
இந்த போற்றித் திரு அகவல் என்ற அத்தியாயம் தில்லையில் அருளியமந்திரம். அம்பலத்தே ஆடுகின்ற இறைவனைக் கண்டு மாணிக்கவாசகர் ஆனந்தமாய் மெய்மறந்து உருகிய நிலையில் அருளியது. நடராஜப் பெருமானே இயற்பியல் எனும் இயற்கைப் பற்றிய தெளிவினைத் தரக் கூடியவர் என்பதை நாசா முதலான விஞ்ஞான ஆராய்ச்சி கூடங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. சிதம்பரத்தில் இன்றும் அந்நிய தேசத்தவர்கள் பெருமளவில் வந்து செல்வதைக் காண இயலும். இதனை உணர்ந்துதான் மாணிக்கவாசகப் பெருமான் எந்நாட்டவர்க்கும் இறைவனாக விளங்குபவனே எம் தென்னகத்தில் சிவனாகப் போற்றப்படுகிறான் என்று பாடுகிறார்.வடக்கில் கயிலாயம் இருந்தாலும் தென்னாடுடைய சிவனே போற்றி என்று பாடப்பட்டதன் பொருள் இதுவே.
தென்னாட்டில் இறைவனை சிவன் என்றும் ஏனைய மற்ற இடங்களில் இறைவன் என்றும் அழைககபபடும் சிவனே.இறைவனே..
#arudra #arudradarisanam #sivan
Arudra Darshan - ஆருத்ரா தரிசன மகிமைகள்

Your comment will be visible after approval.