ஆன்மிகப் பயணம் செல்பவர்களுக்கு தான் தெரியும் அந்த பயணம் எவ்வளவு சிறப்பானது என்று. நாம் சாதாரணமாக பயணம் மேற்கொள்வதற்கும் ஆன்மிகப் பயணம் மேற்கொள்வதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. கடவுளையே நினைத்து வணங்கி நீ இல்லையேல் நான் இல்லை என்று மனதில் நினைத்து உண்மை நிறைந்த பார்வைகளால் கடவுளை தரிசிக்கும் போது ஏற்படும் மன நிம்மதி வேறு எந்த ஒரு பயணத்தாலும் கொடுக்க முடியாது.
இப்படி ஒரு மன நிம்மதியை தரக்கூடிய திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்றால் எப்படி இருக்கும்.
முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ளது. இது அதனுடைய சிறப்பும் கூட எனலாம். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மூன்று நகரங்களுக்கு நடுவில் திருச்செந்தூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானையுடன் முருகன் அழகாய் காட்சி தருகிறார் இங்கு. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும் இது தான்.
மேலும் ஒன்பது அடுக்கு கோபுரத்துடன் இங்கு அழகாய் காட்சி தருகிறார் முருகன் பகவான். மேலும் இங்கு நாழிக் கிணறும் உள்ளது. இந்த முருகனை வணங்கி தரிசனம் செய்வதால் நாம் எந்த ஒரு நோய் நொடியும் இன்றி சந்தோஷமாக வாழலாம். இவரை வந்து தரிசித்தால் நம் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீரும் என்பது பலரின் நம்பிக்கை.
எனவே தான் ஆன்மிகப் பயணத்திற்கு இந்த கோவில் மிகவும் உகந்ததாக இருக்கும் என்று நினைத்து பலரும் செல்கின்றன. நீங்களும் சென்று வாருங்கள்.


Your comment will be visible after approval.