மந்திரங்களில் சிறந்த மந்திரமாக காயத்ரி மந்திரத்தினையே கூறுவார்கள். அதாவது காயத்ரி மந்திரத்தை உலகுக்கு அளித்தவர் விசுவாமித்ர முனிவர் என்பது நாம் அறிந்ததே. இந்த மந்திரம் குறித்து மகாபாரதத்தில் கிருஷ்ணர் கூறி இருப்பார்.
காயத்ரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தினை கல்வியில் சிறந்து விளங்க நினைப்போர் நிச்சயம் பாடுதல் வேண்டும். மேலும் தொழிலில் சிறந்த விளங்குதல், உயர் பதவியினை அடைய நினைப்போர் என அனைவரும் காயத்ரி மந்திரத்தை ஜெபித்து வழிபடல் வேண்டும்.
மேலும் காயத்ரி மந்திரத்தினை தினமும் கூறி வரும் பட்சத்தில், அனைத்து வகையான இன்பங்களும் கிடைக்கப் பெறும். மேலும் காயத்ரி மந்திரமானது நம்மை ஒழுக்க நெறியுடன் வழிநடத்த உதவுகின்றது.
காலையில் எழுந்து குளித்து முடித்த பின்னர் பூஜை அறைக்குச் சென்று மூன்று முறை காயத்ரி மந்திரத்தைக் கூறுதல் வேண்டும், மேலும் மாலை நேரத்திலும் நாம் தூங்கச் செல்லும் முன் காயத்ரியை நினைத்து மந்திரத்தைக் கூறுதல் வேண்டும்.
காயத்ரி மந்திரத்தை தினமும் மாணவர்கள் படிக்கத் துவங்கும் முன் கூறிப் படிக்கத் துவங்குதல் வேண்டும், மேலும் அனைத்து வகையான ஐஸ்வர்யங்களையும் காயத்ரி மந்திரமானது நிச்சயம் அருளும்.


Your comment will be visible after approval.