Tongue Twisters Words in Tamil
சிலருக்கு உச்சரிப்பு சரியாக வராது, சிலரால் தெளிவாகப் பேச முடியாது, சிலருக்கு திக்கு வாய் பிரச்சனை இருக்கும். இப்படி பேச்சில் ஏதாவது பிரச்சனை இருந்தால் தினமும் Tongue Twisters ஒரு 5 நிமிடம் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
முதலில் மெதுவாக சொல்லி சொல்லி பயிற்சி செய்ய வேண்டும். மெதுவாக சொல்லும் பொழுது தெளிவாக சொல்லவும் பயிற்சி எடுக்க வேண்டும். மெதுவாக சொல்ல முடிந்தால் மறுநாள் சிறிது வேகத்தை கூட்டலாம். இப்படியே ஒவ்வொரு நாளும் வேகத்தை கூட்டிக் கொண்டே வந்து, விரைவில் அதிவேகமாக சொல்லவும் பயிற்சி எடுங்கள். உங்கள் பேச்சு திறன் அதிகரிக்கும். கீழே சில tongue twisters கொடுத்துள்ளோம். இதனை சொல்லி சொல்லி பயிற்சி எடுங்கள்.
1. கும்பகோணத்தில் குரங்குகள் குச்சியால் குத்தியதால் குரங்குகள் குளத்தில் குபீரென குதித்து கும்மாளமிட்டன.
2. தோட்டமாம் தோட்டம் பப்பாளி தோட்டம். படுத்த பாயை சுருட்டிக் கொண்டு எடுத்தானடி ஓட்டம்.
3. வாழைப்பழம் வழுக்கி கிழவி ஒருத்தி கீழே விழுந்தாள்.
4. ஏழை கிழவன் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்தான்.
5. கொக்கு நெட்ட கொக்கு. நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட.
6. பச்சைக் குழந்தை வாழைப்பழத்திற்காக விழுந்து விழுந்து அழுதது.
7. கடலோரத்தில் அலை உருளுது பிறழுது தத்தளிக்குது தாளம் போடுது.
8. இது யாரு தச்ச சட்டை? எங்க தாத்தா தச்ச சட்டை.
9. ஆடுற கிளையில ஒரு கிளை தனிக்கிளை; தனிக்கிளை தனில் வந்த கனிகளும் இனிக்கலை.
10. சரக்கு ரயிலைக் குறுக்கு வழியில் நிறுத்த நினைத்த முறுக்கு மைனர் சறுக்கி விழுந்தும் முறுக்கு மீசை இறங்கவில்லை.
11. ஓடுற நரியில ஒரு நரி கிழநரி; கிழநரி முதுகுல ஒரு முடி நரைமுடி.
12. கிழட்டுக் கிழவன் சடுகுடு விளையாட, குடுகுடுவென ஓடி வாழைப்பழத்தோலில் வழுக்கி விழுந்தான்.
13. ப்ளூ லாரி உருளுது புரளுது.
14 கருகும் சருகும் உருகும் துகிரும் தீயில் பட்டால்.
15. வீட்டுக்கிட்ட கோரை; வீட்டுக்கு மேல கூரை; கூரை மேல நாரை.
16 குலை குலையாய் வாழைப்பழம் மழையில் அழுகிக் கீழே விழுந்தது.
17. ஏழை கிழவன் வாழைப்பழத் தோல் மேல், சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்.
18. நம்ம தோசை நல்ல தோசை தச்சன் தோசை தீஞ்ச தோசை
19. காக்கா காக்காகானு கத்திறதினல காக்கா னு பேரு வந்ததா?
20. காக்கா னு பேரு வந்ததினால காக்கா காக்காகானு கத்துதா
21. சேத்துக்குள்ள சின்னப் புள்ள தத்தித் தத்தித் சிக்கிக் கிச்சு.
22. சித்திரம் வரைகிற சித்திரவேலன சத்திரசுவர்ல சித்திரம் வரைய சொன்னா பையன் சத்திரத்தையே பத்திரம் போட்டு வித்துட்டான்.
23. பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்?
24. குழம்புல கோழி வழிக்கிற களி, கிளறக் கழி, கழியெடுத்து ஒளி, இது பழிக்குப் பழி.
25. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.
###Tongue Twisters Words in Tamil***

Your comment will be visible after approval.